பிரித்தெழுதுக-(Part 7)

பி

1. பின்னல்லது - பின்+அல்லது 
2. பிணியறியோம் -பிணி+அறியோம் 
3. பிணியின்றி-பிணி+இன்றி

பீ 

4. பீடுற - பீடு+உற

பு 

5. புக்கான்- புகு+ஆன் 
6. புகுந்தீங்கு-புகுந்து+ஈங்கு 
7. புத்தேளுலகு-புத்தேள் +உலகு 
8. புள்ளறு- புள்+அறு
9. புத்துயிர்-புதுமை+உயிர் 
10. புதுவதன்று-புதுவது+அன்று 
11. புள்ளுறு-புள்+உறு
12. புக்குழி- புகு+உழி
13. புவன நாயகன்-புவனம்+நாயகன்
14. புரையற- புரை+அற
15. புண்ணெண்ணி-புண்+எண்ணி 
16. புகழுடம்பு-புகழ்+உடம்பு 
17. புகழலால் - புகழ்+அல்லால் 
18. புன்கண்-புன்மை+கண் 
19. புகழெனக்கு-புகழ்+எனக்கு  
20. புறநானூறு-புறம்+நான்கு+நூறு
(OR) புறம்+நானூறு

பூ 

21. பூம்புனல் -பூ+புனல் 
22. பூந்தோட்டம்- பூ+தோட்டம் 
23. பூங்கொடியாள்- பூ+கொடியாள்
24. பூந்தொடை-பூ+தொடை 
25. பூங்காற்று- பூ+காற்று 
26. பூங்கோதை-பூ+கோதை 
27. பூதமெல்லாம்-பூதம்+எல்லாம் 
28. பூஞ்சோலை- பூ+சோலை

பெ 

29. பெரியன்-பெருமை+அன்
30. பெருந்தேன்-பெருமை+தேன்
31. பெருங்குடி-பெருமை+குடி 
32. பெண்ணணங்கு-பெண்+அணங்கு
33. பெருங்கடல்-பெருமை+கடல்
34. பெருந்தமிழ்-பெருமை+தமிழ் 
35. பெருங்களிறு-பெருமை+களிறு 
36. பெருந்தேர்-பெருமை+தேர் 
37. பெருந்தெய்வம்- பெருமை+தெய்வம் 
38. பெரும்பூதம்-பெருமை+பூதம் 
39. பெருந்துன்பம் -பெருமை+துன்பம் 
40. பெருநாள்- பெருமை+நாள் 
41. பெருவரி- பெருமை+வரி 
42. பெருங்கிரி-பெருமை+கிரி 
43. பெருஞ்சிரம்-பெருமை+சிரம் 
44. பெரும்பேர்-பெருமை+பேர் 
45. பெண்ணரசு-பெண்+அரசு 
46. பெருங்கற்று-பெருக்கு+அற்று 
47. பெரிய புராணம்-பெரியர்+ புராணம் 
48. பெருக்கெடுத்து-பெருக்கு+எடுத்து

பே

49. பேரின்பம்-பெருமை+இன்பம் 
50. பேரறிவு-பெருமை+அறிவு 
51. பேரண்டம்-பெருமை+அண்டம் 
52. பேரழகு-பெருமை+அழகு 
53. பேரிரையான்-பெருமை+இரையான்
54. பேராறு -பெருமை+ஆறு
55. பேரானந்தம் -பெருமை+ஆனந்தம்
56. பேருரம்- பெருமை+உரம் 
57. பேரறிவாளன் - பெருமை+அறிவாளன்
58. பேருஞ்சி-பெருமை+இஞ்சி
59. பேரிடி - பெருமை+இடி

பொ

60. பொருளுதவி -பொருள்+உதவி 
61. பொற்றேர்-பொன்+தேர் 
62. பொருத்திரங்கும்-பொருது+இரங்கும்
63. பொருத்திழிதரு - பொருது+இழிதரு
64. பொங்கரி -பொங்கு+அரி 
65. பொருளுடைமை-பொருள்+உடைமை
66. பொற்கொல்லர்-பொன்+கொல்லர் 
67. பொற்பங்கயம்- பொன்+பங்கயம் 
68. பொற்றொழில் - பொன்+தொழில் 
69. பொற்கிழி -பொன்+கிழி
70. பொற்கொடி-பொன்+கொடி
71. பொன்றீது-பொன்+தீது
72. பொன்னன்று-பொன்+நன்று 
73. பொற்குடம்-பொன்+குடம் 
74. பொருளெல்லாம்-பொருள்+எல்லாம் 
75. பொருட்பயன்-பொருள்+பயன் 
76. பொருளனைத்தும் -பொருள்+அனைத்தும் 
77. பொதுவது- பொதுமை+அது 
78. பொற்குற்ற வேணி-பொன்+குற்ற+வேணி 
79. பொற்கோட்டு மேரு -பொன்+கோடு+மேரு  

போ

80. போலொளி -போல்+ஒளி 
81. போர்க்குறி-போர்+குறி 
82. போன்றிருந்தேன்- போன்று+இருந்தேன் 
83. போதிலார்-போது+இல்+ஆர்

ம 

84. மனந்தழைப்ப - மனம்+தழைப்ப
85. மக்கட்பண்பு-மக்கள்+பண்பு 
86. மரவடி-மரம்+அடி
87. மரவரி-மரம்+உரி 
88. மரமுஞற்றி-மரம்+உஞற்றி 
89. மண்ணரசு-மண்+அரசு
90. மலர்த்தூள்-மலர்+தூள் 
91. மலர்க்கரம்-மலர்+கரம் 
92. மரையிதழ்-மரை+இதழ் 
93. மந்தாநிலம்- மந்த+ அநிலம்
94. மன்னறம்- மன்+அறம்
95. மற்றொன்று-மற்று+ஒன்று 
96. மற்றாங்கே -மற்று+ஆங்கே
97. மணிக்காசு- மணி+காசு 
98. மழைக்கண்ணீர்- மழை+கண்ணீர்
99. மணிக்கழுத்து-மணி+கழுத்து 
100. மதியெறிந்து- மதி+எறிந்து