பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் (பகுதி– 8)
தொ
1. தொய்வு -பின்னடைவு /வளைந்த /இளைப்பு
2. தொகை-பணம் /தொகுத்தல்
3. தொலைவு-தூரம்
4. தொன்மை-பழமை /புகழ்
5. தொடை-மாலை
6. தொண்டு -பணி
7. தொகுப்பு-கோவை
8. தொழும்பர் -தொண்டர்
9. தொழு -வணங்கு
10. தொனி-ஓசை
தோ
11. தோகை-மயில்
12. தோணி-படகு
ந
13. நயம் -இன்பம் /அன்பு
14. நயன் -நீதி/ நன்மை
15. நனி-மிகுதி /மிகவும்
16. நகை- இகழ்ச்சி /சிரிப்பு/தங்க நகை
17. நறை-தேன்/மனம்
18. நம்பி -நல்லிளைஞன்
19. நந்தி-காளை
20. நரவு-தேன்
21. நல்குதல் -தருதல்
22. நல்கும் -தரும்
23. நலிவு -கேடு
24. நகல் -சிரித்தல்
25. நரை-வெண்மயிர்
26. நதி-ஆறு
27. நட்டார் -நண்பர்
28. நங்கை -நல்ல பெண்
29. நல்கு-கொடு
30. நல்குரவு-வறுமை
31. நண்பு -நட்பு /கேண்மை
32. நன்னீர் -தூய்மை நீர்
33. நகுதல்-சிரித்தல்
34. நடுவண் அரசு-மத்திய அரசு
35. நன்னயம் -நன்மை
36. நண்ணுவது-நெருங்குவது
37. நன்னுதல் -நல்ல நெறி
38. நக-மலர்தல்
39. நவில்தொறும் -கற்கக் கற்க
40. நத்தம் -செல்வம்
41. நயமில -தீங்கு
42. நன்றி-நன்மை
43. நடலை-நோய்
44. நளிர் -குளிர்ச்சி
45. நற்றிறம் -அறநெறி
46. நவ்வி –மான்
நா
47. நாயகன்- தலைவன்
48. நானிலம்-உலகம்
49. நாமம்-பெயர்
50. நாடுதல் -விரும்புதல்
51. நாளம்-நரம்பு
52. நால்-தொங்குதல்
53. நாடி-விரும்பி
54. நாரி-பெண்
55. நாட -தேவருலகம்
56. நாவாய்-கப்பல்/படகு
57. நாற்றம் -மணம்/தீநாற்றம்
58. நாண்-வயிறு/வெட்கம்/அம்பு /கயிறு/நாணம்
59. நாணம் -வெட்கம்
60. நாளிகேரம் -தென்னை
61. நாதம் -ஒலி
62. நாடா-அளவு இல்லாத
63. நாற்கரணம் -மணம்/புத்தி/சித்தம்/அகங்காரம்
64. நாற்பொருள் -அறம்,பொருள்,இன்பம் ,வீடு
நி
65. நிரை-இடைவரிசை/பசுக்கூட்டம் /ஆவினம்
66. நித்திரை-உறக்கம்
67. நிவேதனம் -படையலமுது
68. நிருபர் -அரசர்
69. நித்தியம்-முத்து
70. நிதி -செல்வம்
71. நிசி -நள்ளிரவு
72. நிணம் -கொழுப்பு
73. நித்தம் -நாள்தோறும்
74. நிரல்-வரிசை
75. நிகர் -ஒப்புமை
76. நிற்க -நடக்க
77. நிறைகோல்-துலாக் கோல்
78. நிலைபெறுத்தல் -காத்தல்
79. நிறை-சால்பு
நீ
80. நீவி -நீங்கி
81. நீலி -பேய்
82. நீரவர் -அறிவுடையார்
83. நீள்விசும்பு -பரமபதம்
84. நீக்கல்-அழித்தல்
85. நீங்கலா-இடைவிடாது
நு
86. நுதல் -நெற்றி
87. நுணல்/நுனல் -தவளை
88. நுணுக்கம் -நுட்பம்
89. நுளையர்-பரதவர் /மீன்பிடி தொழிலாளர்
90. நுவலல் –கூறல்
நெ
91. நெடிய -உயர்ந்த
92. நெகிழ -உருக
93. நெறி-நல்வழி /வழி
94. நெடிய மொழிதல் -அரசரிடம் சிறப்பு பெறுதல்
நொ
95. நொ -வ்ருந்து
96. நொய்மை -மென்மை
97. நொம்பலம்-துன்பம்
நோ
98. நோ-துன்பம்
99. நோன்பு -தவம்/விழா
100. நோதல்- வருந்துதல்
0 Comments