எழுத்திலக்கணம் - எழுத்து 

எழுத்து:-

  • மொழிக்கு முதற் காரணமாய் ,அணுத்திரளின் காரியமாய் இருப்பது
  • எழுத்து இருவகைப்படும்
    1. ஒலி எழுத்து
    2. வரி எழுத்து
  • ஒலிக்கப்படுவதால் ஒலி எழுத்து எனப்படும்.
  • எழுதப்படுவதால் வரி எழுத்து எனப்படும்.
  • எழுத்தானது - எண், பெயர், முறை, பிறப்பு , உருவம், மாத்திரை, முதல் எழுத்துக்கள், இறுதி எழுத்துக்கள் , இடைநிலை எழுத்துக்கள், போலி, பதம். புணர்ச்சி என 12 பகுதிகளாக விளக்கப்படும் .( நன்னூல் - பவணந்தி முனிவர்)


எழுத்துக்களின் எண்ணிக்கை

  • உயிரெழுத்துக்கள் - 12
  • மெய்யெழுத்துக்கள் -18
  • உயிர்மெய் - 216
  • ஆய்த எழுத்து - 1

மொத்தம் = 247 எழுத்துக்கள்