தமிழ் இலக்கண வகைகள் 

இலக்கணம் :-

மொழியைப் பிழையின்றி பேசவும், எழுதவும்  துணை புரிவது 

இலக்கணமாகும் .

தமிழலக்கணம் 5  வகைப்படும்

1 ) எழுத்திலக்கணம் -

         எழுத்துக்களின் பெயர், முறை, பிறப்பு, எண் பற்றிக் கூறுவது

2 ) சொல்லிலக்கணம்

         சொற்களின் வகைகள்,தன்மைகள் பற்றிக் கூறுவது

3 ) பொருளிலக்கணம்

       முன்னோர்களின் வாழ்கை நெறிகளான அன்பு, வீரம், ஒழுக்கம் பற்றிக் கூறுவது.

4 ) யாப்பிலக்கணம்

           செய்யுள்களின் அமைப்பு , வகை பற்றிக் கூறுவது.

5 ) அணியிலக்கணம்

        செய்யுளில்  காணப்படும் அழகினைப் பற்றி கூறுவது