பொருத்தமான   பொருளை தேர்வு செய்தல்  (பகுதி– 11) 

             ம

1. மஞ்சு -மேகம் 

2. மருப்பு-தந்தம் /கொம்பு 

3. மருள் -மயக்கம் 

4. மருண்டு-மருச்சியடைந்து/மிரண்டு 

5. மறம்-வீரம்/பாவம் 

6. மல்லல் -வளப்பம் /வளம் 

7. மணக்கூலி-வரதட்சணை 

8. மறவி -மறதி

9. மருகு-தெரு 

10. மறி-ஆடு/மான் 

11. மருமம் -மார்பு 

12. மறன்-வீரம் 

13. மன்பதை -மக்கள் 

14. மதுகரம் -தேனீ 

15. மது -தேன்

16. மறையான்-சுக்கிரன் 

17. மன்-மன்னன் 

18. மறை -வேதம் /வேத நூல் 

19. மறையோர் -அந்தணர் 

20. மனோபாவம் -உளப் பாங்கு

21. மறவன் -வீரன் 

22. மறவர் /மள்ளர் -வீரர் 

23. மரு-மணம்

24. மல்குதல் -நிறைதல்

25. மன்னுயிர் -நிலைபெற்ற உயிர் 

26. மங்கா -குறையாத

27. மனை -வீடு /மனைவி 

28. மணம் -திருமணம் /வாசனை 

29. மடு-நீர்நிலை (ஆழம்) 

30. மதகு -மடை 

31. மலை-பொறுப்பு 

32. மண்புக்கு-மண்ணோடு 

33. மதகரி-மதம் பொருந்திய யானை 

34. மந்திராசலம் -மந்திர மலை 

35. மன்னிய -நிலை பெற்ற

36. மறையோர் -முனிவர் 

37. மடப்பிடி –பாஞ்சாலி

மா 

38. மா -விலங்கு /மாமரம் 

39. மாக்கள்-விலங்கு 

40. மாரி-மழை

41. மாத்திரை -கால அளவு /அளவு 

42. மாசு -குற்றம் 

43. மாரன்-மன்மதன் 

44. மால்/மாயேன் -திருமால் /மயக்கம் 

45. மாய்வது -அழிவது 

46. மாட -செல்வம் /பக்கத்தில் 

47. மாள-நீங்க 

48. மாருதம் -காற்று 

49. மாண்-மாண்பு /சிறந்த 

50. மாசற்றார் -குற்றமற்றவர் 

51. மாது -பெண் 

52. மாதே -பெண்ணே 

53. மாடு -செல்வம் 

54. மாறு -எதிர்ப்பு 

55. மாநிதி -பெருஞ்செல்வம் 

56. மாண்பு -பெருமை

57. மாந்தர் -மனிதர் 

58. மாண-மிகவும் 

59. மார்க்கம் -வழி

60. மாதிரம்-மலை

61. மாந்தா நிலம்-மெல்லிய காற்று

62. மாதவர் –முனிவர்

மி 

63. மிடறு-கழுத்து 

64. மிசை-மேல்  

மு 

65. முந்நீர் -கடல் 

66. முடுக்கர் -சந்து 

67. முசு -குரங்கு 

68. முறி-தளிர் /முறித்தல்

69. முன்றில்-வீட்டின் முன்பகுதி 

70. முகில்-மேகம் 

71. முழவு -பறை /மத்தளம் 

72. முருகு -அழகு/மணம் /இளமை /நிலைபேறு /தேன் 

73. முண்டகம் -தாமரை 

74. முயற்சி -உழைப்பு 

75. முயற்று -முயற்சி 

76. முதன்மை -தலைமை 

77. முகை -மொட்டு/அரும்பு 

78. முனிவு -வெறுப்பு/சினம் 

79. முனிதல்-சினங்கொள்ளுதல் 

80. முகநக-முகம் மலர 

81. முட்டு -குவியல் 

82. முறுவல் -புன் சிரிப்பு  

மூ 

83. மூ -பெருமை/பழமை 

84. மூரல் -முறுவல் 

85. மூதூர் -பழமையான ஊர் 

86. மூத்த –முதிர்ந்த

மெ

87. மெய்ஞ்ஞானம்-மெய்யறிவு 

88. மெய்-உண்மை /உடல் /மெய்யெழுத்து  

மே 

89. மேலை -மேற்கு 

90. மேழி -கலப்பை 

91. மேரு -இமய மலை 

92. மேதி-எருமை 

93. மேவி -பொருத்தி /விரும்பி/ஏற்றல்/மேற்கொள்ளல் 

94. மேனி- உடம்பு

மை

95.    மை -குற்றம் /விஞ்ஞானம் /எழுது மை /கருமை /பேனா மை 

96. மையல்-மயக்கம் 

97. மைய்ய -மிகச்சிறிதாக 

98. மைனா -கருமை நிற பறவை  

மொ

99. மொழி -சொல் 

100. மொய்ம்பு –வலிமை