பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்-பகுதி-6
ச
1. சந்நிதி -கோபுரம்
2. சமயம்-மதம்
3. சலித்து-வெறுத்து
4. சழக்கு-பூசல்
5. சங்கின் பிள்ளை-சங்குச் குஞ்சிகள்
6. சந்தம் -அழகு
7. சலாம்-வணக்கம்
8. சவம்-சடலம்
9. சதுரங்கச் சேனை -நால்வகைப் படைகள்
10. சடிலம்-சடை
சா
11. சாக்காடு -இறப்பு
12. சாந்தம் -அமைதி /சந்தனம்
13. சாகாடு -வண்டி
14. சாயை -நிழல்
15. சாத்திரம் -வேதம்
16. சாரல்- மலைச் சரிவு /சாரல் மழை
17. சாக்கு -உடன்மொழி/சாட்சி
18. சாபம் -வில்/சாபமிடுதல்
19. சாகை-வீடு
20. சாமரை/சாமரம் -விசிறி
21. சாறு -விழா
22. சால்பு -சான்றாண்மை/நிறை பண்பு
23. சான்று-அமைந்த
24. சாதனம் -கருவி
25. சார்பு -துணை
26. சால்- உழுதல்
27. சாலார் –தீயவர்
சி
28. சிந்தை -மனம்/ எண்ணம்
29. சிலை- கல்/சிற்பம்/வில்/ ஒலியெழுப்பு
30. சிவிகை-பல்லாக்கு
31. சிலம்பு- காலனி/ஒலி/மலைச் சாரல்
32. சிதை-ஈமநெருப்பு
33. சிதர்-கந்தைத் துணி /சிதறல்
34. சிறார் -சிறுவர்
35. சினம்-கோபம்
36. சிகரம் -உயர்ந்த /உச்சி
37. சின்னம்- அடையாளம்
38. சிறப்பு-மேன்மை
39. சித்தம் -மனம்
40. சிறுமை-தாழ்வு
41. சித்திரம் -ஓவியம் /அழகு
42. சிறை –இறக்கை
சீ
43. சீர்மை - விழுப்பம்
44. சீதம்-குளிர் /குளிர்ச்சி
45. சீற்றம் -சினம் /கோபம்
46. சீர் -புகழ்/பெருமை/செல்வம்
47. சீர்த்த /சீராரும் - சிறப்புடைய /உயர்ந்தவை
48. சீலம்-ஒழுக்கம்
49. சீத்தை –கீழானவை
சு
50. சுகம்- கிளி/நலம்
51. சுங்கம் -வரி
52. சுருதி -ஓசை
53. சுற்றம் -உறவு
54. சுடர்-ஒளி
55. சுவடி-பாடநூல்
56. சுரம் -பாலை நிலம் /வழி
57. சுரும்பு -வண்டு
58. சுகந்தம்-வாசனை /மணம்
59. சுதி-இசையொலி
60. சுமக்க –பணிக
சூ
61. சூல்-கருப்பம்
62. சூசகம் –குறிப்பு
செ
63. சென்னி -தலை
64. செம்மாந்து -பெருமிதத்துடன்
65. செழிப்பு/செழுமை -வளம்
66. செருக்களம்-போர்க்களம்
67. செறுநர் -பகைவர்
68. செலவு/செலவழி -பயணம்
69. செய் -வயல்
70. செரிதல் -அடர்தல்
71. செரு/செறு -போர் /வயல்
72. செருக்கு -இறுமாப்பு
73. செல்-சிறுபூச்சி
74. செற்றல்-அழித்தல்
75. செற்றார் -பகைவர்
76. செற்றம்-கோபம்
77. செறிவு-அடக்கம்
78. செவ்வேள்- முருகன்
79. செவி-காது
80. செயல்-அறிவு
81. செப்பிய -கூறிய
82. செயல்நிரல்-நிகழ்ச்சிகள்
83. செய்யோள் -திருமகள்
84. செனிக்கும்-தோன்றும் /பிறக்கும்
85. செவ்வி-தகுந்த காலம்
86. செந்தண்மை –இரக்கம்
சே
87. சேய்-மகன்/குழந்தை /தொலைவு /முருகன்
88. சேய்மை -தொலைவு /தூரம்
89. சேமம் -நலம்
90. சேடி-தோழி
91. சே -தோழி /காளை
92. சேவடி -செம்மையான திருவடி
சொ
93. சொத்தை -குற்றம்
94. சொக்கு -கவர்ச்சி/அழகு
சோ
95. சோகாப்பர் - துன்புறுவர்
96. சோரன் -திருடன்
97. சோமன் -சந்திரன்
98. சோதி –ஒளி
ஞ
99. ஞமலி –நாய்
ஞா
100. ஞாயிறு - சூரியன்
0 Comments