பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் (பகுதி– 7) 

ஞா

1. ஞானம் -அறிவு,மெய்யறிவு 

2. ஞாலம் -உலகு /உலகம்

ஞி

3. ஞிமிறு-வண்டு

4. தயவு-இரக்கம் 

5. தந்தி -ஆண் யானை 

6. தகவு -நன்னடத்தை 

7. தகை-தகுதி 

8. தளை-கட்டு/விலங்கு 

9. தத்தை-கிளி 

10. தவ -மிகுதி 

11. தண்டலை -சோலை

12. தனு-வில் 

13. தகி-சுடு

14. தபு-தவிர்/அழி

15. தழை-இலை/செடி 

16. தலை-சிறப்பு /முதன்மை /சிறந்த பண்பு 

17. தங்கையார் -பெண்டிர் 

18. தவம் -பெரும் பேறு 

19. தடவரை -அகன்ற மலை 

20. தவ்வை-மூதேவி 

21. தருணம் -சமயம் 

22. தளவம்-முல்லை 

23. தரிசு -விளையாத நிலம் 

24. தவிசு-இருக்கை

25. தண்-குளிர் 

26. தக -பொருத்தம் 

27. தகைசால் -நல்ல குணங்கள் 

28. தரு -மரம் 

29. தருக்கு -செருக்கு 

30. தடக்கை -பெரிய கை

31. தரணி-உலகம் 

32. தவிர்க்க -நீக்க 

33. தட்பம் -குளிர்ச்சி 

34. தரம்-வகை 

35. தடக்கரி-பெரிய யானை 

36. தமர் -உறவினர் 

37. தடம் -குளம்/தடாகம் 

38. தலைவர்-இறைவர்

தா 

39. தானை- சேனை/படை 

40. தாழை-மலர் 

41. தாம்பு -பிணையல்/கயிறு 

42. தாள் -முயற்சி /திருவடி 

43. தாரணி-உலகம்

44. தால்-தாலாட்டு /நாக்கு 

45. தார்-மாலை

46. தாதை-தந்தை 

47. தாது -மகரந்தத்தூள் 

48. தாமம்-மாலை 

49. தாளாண்மை -முயற்சி 

50. தாறு -கோல்/அங்குசம் 

51. தாழுகன்-அரக்கன்

52. தாபனம் -பிரதிட்டை 

53. தாரம்-மனைவி 

54. தாரை –வழி

தி 

55. திரை- அலை/கடல்/திரைச்சீலை 

56. திறல்-வலிமை 

57. திரிகை -சக்கரம் 

58. திறை-கப்பம் 

59. திடல்-மேடு 

60. திண்ணம்/திடம்  -உறுதி 

61. தியங்கி-மயங்கி 

62. திங்கள்-நிலவு /மாதம் 

63. திண்மை -உறுதிப்பாடு 

64. திரள்-கூட்டம் 

65. திரவியம் -செல்வம் 

66. திரு -செல்வம் /அழகு /திருமகள் 

67. திணை-மிக சிறிய அளவு

தீ 

68. தீராமை -நீங்காமல் 

69. தீஞ்சுவை -இனிய சுவை 

70. தீயுழி -நரகம் 

71. தீதின்றி -குற்றமில்லாமல் 

72. தீர்கிலேன் –நீங்கமாட்டேன்

து 

73. துயர்/துன்பு  -துன்பம் 

74. துடி-உடுக்கை 

75. துப்பு -பற்றுக்கோடு /உணவு/பவளம் 

76. துகிர்-பவளம் 

77. துழாய் -துளசி 

78. துயில் -உறக்கம்/தூக்கம் 

79. துகள் -குற்றம் /பொடி

80. துப்பட்டி -போர்வை 

81. துலக்குதல் -விளங்குதல் 

82. துறை-படிக்கட்டு

83. துதி –புகழ்

தூ 

84. தூவும் -பொழியும் 

85. தூங்கி -தொங்கி /அசைந்து

86. தூற்று-அவதூறு பேசு

தெ

87. தென்னர் -பாண்டியர் 

88. தென்மலை -பொதிகை மலை

89. தெங்கு -தேங்காய் 

90. தெள்ளியர் -தெளிந்து /அறிவுடையார் 

91. தென்றல்-காற்று

92. தெருமந்து -மருண்டு

93. தெண்டிரை -தெளிந்த அலைகள்  

94. தெறு-பகை

95. தென் மக்கள்- பழைமையான மக்கள்

தே

96. தேரா -ஆராயாத

97. தேக்கும் -நிறைக்கும் 

98. தேகம்-உடல் 

99. தேறல் -தேன்

100. தேர்ந்து –ஆராய்ந்து