வினா எழுத்துக்கள் 

Ø வினா எழுப்ப (அ ) வினாப்பொருளைக் காட்ட உதவும் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் எனப்படும்.

 Ø ஆ,எ, ஏ, ஓ,யா - வினா எழுத்துக்கள் ஆகும் .

 Ø எ,யா - சொல்லின் முதலில் வரும்.

எ.கா

      என்ன?,எது?,எவன்?,யார்?,யாவை?,யாது?,

 Ø ஆ,ஓ- சொல்லின் இறுதியில் வரும்.

                எ.கா

  அவனா ?, இவனா?, அதுவா ?- ஆ

  என் கணவன் கள்வனோ ?- ஓ

 

Ø ஏ - சொல்லின் முதலில், இறுதியில் இரண்டிலும் வரும்.

 

 எ.கா

 ஏன்?ஏது?,ஏனோ ?-முதலில்

 அவனே(ஏ)  செய்தேன்?-இறுதியில் (தற்போது வழக்கில் இல்லை) 

Ø "ஏ " என்னும் எழுத்து  வினாப்பொருளும், அழுத்தப்பொருளும் தரும் எழுத்தாக உள்ளது.

Ø ஏன்?-வினாப்பொருள்,அவனே -அழுத்தப்பொருளில்

 தற்போது "ஏ" க்கு மாற்றாக "தான்" பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. 

                                          எ.கா

  அவனே செய்தான்- அவன் தான் செய்தான்.

அகவினா:-

Ø சொல்லின் உள்ளேயே அமைந்து  வினாப்பொருளை உணர்த்துவது

Ø வினா எழுத்தை நீக்கினால் பொருள் தராது.

         எ.கா

  எவன்? எங்கை? யார்? யானோ ?

 றவினா:-

Ø சொல்லுடன் சேர்ந்து வினாப்பொருளை உணர்த்துவது

Ø வினா எழுத்தை நீக்கினாலும் பொருள் தரும்.

    எ.கா

  எவ்வூர்?- எ+ஊர்

 படித்தானா-படித்தான்+ ஆ

நடிப்பானோ -நடிப்பான்+ஓ

           கள்வனோ -கள்வன்+ஓ