பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்-(பகுதி-5)


கி

1. கிழமை -உரிமை/வாரநாள் 

2. கிளர்ந்து -மிகுந்து /எழுச்சியுற்று 

3. கிண்கிணி -கொலுசு 

4. கிளைஞர்-உறவினர் 

5. கிழவன் -உரிமையுடையவன் 

6. கிலி-அச்சம் /பயம் 

7. கிரணம் -ஒளிக்கதிர் 

8. கிளைகள் -பிரிவுகள் 

9. கிரி-மலை

கீ 

10. கீர்த்தி -பெருமை /புகழ் 

11. கீரம்-கருங்கிளி /பால் 

12. கீர் -சொல்

13. கீழை -கிழக்கு  

கு 

14. குதை -அம்பு /அம்பின் பிடி 

15. குழல் -புல்லாங்குழல் /கூந்தல் 

16. குவடு- மலை/குன்று/சிகரம் 

17. குருதி -இரத்தம் 

18. குரவர்-பெரியோர் /ஆசிரியர் /பெற்றோர் 

19. குறுமுனி -அகத்தியர் 

20. குகன்- முருகன் 

21. குழவி/குழலி-குழந்தை 

22. குருகு-பறவை 

23. குருசு- சிலுவை 

24. குறுநகை-புன்னகை 

25. குணகம் -பெருக்கல் எண்

26. குடிமை-குடிப்பிறப்பு 

27. குனித்த-வளைந்த 

28. குடி-குடும்பம் 

29. குலம்-சாதி 

30. குவியல்-கூட்டம் 

31. குன்று -மலை 

32. குறங்கு-தொடை 

33. குருளை -குட்டி 

34. குன்றா-அணையாத 

35. குவை-குவியல் 

36. குறுகி -நெருங்கி 

37. குரிசில் -தலைவன் 

38. குலவு -விளங்கும் 

39. குந்தம் -சூலம் 

40. குறளை-புறம் பேசுதல்

கூ 

41. கூறை-புடவை / ஆடை 

42. கூவல்- கிணறு 

43. கூடல்-மதுரை /சேர்தல்

44. கூற்றம் -எமன் 

45. கூலம்-தானியம் 

46. கூற்று -கூறுதல் /பேச்சு

47. கூறுகள்- வகைகள் 

48. கூண்ட-சேர்ந்த

கை

49. கைம்மாறு -மாற்றுதவி /எதிர் உதவி /பயன் 

50. கைத்தொன்று -கைப் பொறுள்

51. கை -சிறுமை /ஒழுக்கம்

கே 

52. கேழல் -பன்றி 

53. கேலி -இகழ்ச்சி 

54. கேடில் -அழியாத 

55. கேளிர்/கேனீர் -உறவினர் 

56. கேண்மை -நட்பு 

57. கேவிட-வருந்திட 

58. கேணி -கிணறு

59. கேசரி-சிங்கம் 

60. கேள்-உறவு

கொ

61. கொளல் - பெறல்/சிகரம் 

62. கொடியவர் -தீயர் 

63. கொடுவரி -புலி 

64. கொங்கு -தேன்

65. கொற்றம் -வெற்றி /அரச நீதி 

66. கொண்டல்-மேகம் 

67. கொம்மை -கும்மி 

68. கொழுமை-செழுமை 

69. கொச்சகம் -மடிப்பு 

70. கொல்லை-முல்லை நிலம் /வீட்டின் பின்புறம் 

71. கொழுநன் -கணவன் 

72. கொடி-பவளக் கொடி 

73. கொம்பு -மரக்கிளை 

74. கொப்பின்றி-வேறுபாடு இன்றி

கோ

75. கோ -அரசன்/ பசு/தலைவன் 

76. கோதை-மாலை/கோத்தல்

77. கோடு-யானைத் தந்தம் /கொம்பு /சிகரம் 

78. கோள்-கதிரவன் 

79. கோல-அழகிய 

80. கோன்-அரசன் 

81. கோது-குற்றம் 

82. கோதில்-குற்றமில்லாத 

83. கோயில் -அரண்மனை 

84. கோடல்-செங்காந்தள்/கொள்ளுதல் 

85. கோறல்-கொலை 

86. கோலம்-அழகு

87. கோட்டி-கற்றோர் சபை

ச 

88. சகம்-உலகம் 

89. சத்துரு -பகைவர் 

90. சங்கமம் -கூடல்

91. சஞ்சலம் -துன்பம்/ கவலை 

92. சலம்-வஞ்சனை /பொய் /நீர் 

93. சந்து -சந்தனம் 

94. சகி-தோழி 

95. சம்பு-நாவல் மரம் 

96. சங்கரன்- சிவன் 

97. சலதி-கடல் 

98. சலவர் -வஞ்சகர் 

99. சமுதாயம் -மக்களின்  தொகுப்பு 

100. சரணம்-அடைக்கலம்