பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் (பகுதி– 9)
நோ
1.நோன்றல் -பொறுத்தல்
2. நோய்-துன்பம்
ப
3. பயக்கும் -கொடுக்கும்
4. பகர்-விடை/மறுமொழி
5. பகழி-அம்பு
6. பறை -மத்தளம்
7. படு-மிகுதி
8. படலம் -போர்வை
9. பஞ்சம் -வறட்சி
10. பரவி/பராவி-புகழ்/ வணங்கி
11. பல்லவம்-நட்பு / தளிர் /கொடி
12. பகடை -தாயம்
13. பனித்த-குளிர்ந்த
14. பகம்-ஆறு
15. பனை -பேரளவு
16. பணை-மூங்கில்
17. பளு -சுமை
18. பதி-தலைவன்
19. படர் -துயர்
20. பங்கயம் -தாமரை
21. பள்ளி -கல்விச்சாலை /இடம்
22. பல்பணி -பல அணிகலன்கள்
23. பலகணி -சன்னல்
24. பண்டு -பழங்காலம்/ முற்காலம் /கடவுள்
25. பரிதி -சூரியன்
26. பரி-குதிரை
27. பணி-வேலை/தொண்டு /தொழில் /பணிதல்
28. படி -நிலம்
29. பரக்கழி-பெரும் பழி
30. படை -அடுக்கு /போர் /கருவி
31. பண்-பாட்டு/இசை
32. பந்தனை-ஆசை
33. பராபரம்-மேலான பொருள்/இறைவன்
34. பழனம்-வயல்
35. பரவை-கடல்
36. பதங்கள்-திருவடிகள்
37. பவனி -உலா
38. பரிப்பு-இயக்கம்
39. பதுமை-பொம்மை
40. பகரா -கொடுத்து
41. பத்தடுத்த -பாத்து மடங்கு
42. பதிகம் -பத்துப் பாடல்கள்
43. பந்தர் -பந்தல்
44. பயந்த -அளித்த
45. பண்ணவன் -இலக்குவன்
46. பவித்திரம் -புனிதம்
47. படரா-செல்லாத
48. பண்ணவர் –தேவர்
பா
49. பார்/பாரகம் -உலகம்
50. பாதம் -கால்
51. பாட்டை-வழி
52. பாதகம்-தீமை /தீவினை
53. பாடு -பெருமை /சான்றோர் /நெறி
54. பாத்தி-வரம்பு
55. பாராதி -நிலவுலகம்
56. பாநான்கு -வெண்பா ,ஆசிரியப்பா,கலிப்பா ,வஞ்சிப்பா
பி
57. பிடி -பெண்யானை /பிடித்தல்
58. பிணை -பெண்மான்
59. பிசி -விடுகதை
60. பிணக்கு -மாறுபாடு/பூசல் /சண்டை
61. பிணவு-பெண்கரடி /பெண்
62. பிழை-குற்றம்/பழி
63. பிழி-தேன்
64. பிணி -நோய் /கட்டு
65. பிறழ்ந்து -நெறி தவறி
66. பிதா-தந்தை
பீ
67. பீடு-பெருமை
68. பீலி -மயில் தோகை/பெருங் காற்று
69. பீடிகை -மேடை
70. பீழை-துன்பம்
பு
71. புயம்-தோள்
72. புக்கான் -அடைந்தான் /தந்தான்
73. புரி-செய்
74. புரை -குற்றம்
75. புதிர் -மறைமொழி
76. புடவி-காடு
77. புள்-பறவை/அன்னம்
78. புனிதம்-தூய்மை
79. புலம் -நிலம் /அறிவு
80. புனல்-நீர் /மழைநீர்
81. புகரோன்-சுக்கிரன்
82. புடை -பக்கம்
83. புணை-தெப்பம்
84. புதல்-புதர்
85. புழுங்கி -வருந்தி
86. புவனம் -உலகம்
87. புரவி-குதிரை
88. புலம்பல் -அழுதல்
89. புவி -உலகம்/நிலம்
90. புரம்-வெளி
91. புகர்-விடை/மறு மொழி
92. புனைந்து -சூடுதல்
93. புனைதல் -புகழ்தல்
94. புகல்-கூறு
95. புறம்-உடல்
96. புயல் -மேகம்/மழை /பெருங்காற்று
97. புன்கண்நீர் -சிறிதளவு கண்ணீர்
98. புத்தேள் -தேவர்
99. புளிஞர் -வேடர்
100. புரக்க -காக்க
0 Comments