சுட்டெழுத்துக்கள்
Ø சுட்டுப் பொருளை உணர்த்தும் எழுத்துக்கள்(அ) ஒன்றைச் சுட்டிக்காட்ட பயன்படும் எழுத்துக்கள் சுட்டெழுத்துக்கள் எனப்படும்.
Ø அ ,இ,உ - என்பன சுட்டெழுத்துக்கள் ஆகும்.
Ø இவை பெயரோடு சேர்ந்து வந்தால் அது சுட்டுப்பெயர்கள் எனப்படும்.
எ.கா
அவன்,இது ,உவன்-சுட்டுப் பெயர்கள்
Ø உ-முன்பு வழக்கில் இருந்துள்ளது.இன்றைய வழக்கில் இல்லை .
எ.கா
உதுக்காண்-சற்று தொலைவில் பார்
உப்பக்கம் -முதுகுப்பக்கம்
உம்பர் -மேலே
"ஊழையும் உப்பக்கம் காண்பர் "-திருக்குறள்
அகச்சுட்டு:-
Ø சொல்லின் உள்ளேயே இருந்து பொருள் தரும். சுட்டெழுத்தை நீக்கினால் பொருள் தராது.
எ.கா
புறச்சுட்டு :-
Ø சொற்களுக்கு புறத்தே இருந்து பொருள் தரும். சுட்டெழுத்தை நீக்கினாலும் பொருள் தரும்.
எ.கா
அப்பையன்,இப்பெண்,இவ்வீடு ,அம்மரம்
அண்மைச்சுட்டு :-
Ø அண்மையில் உள்ள பொருளைச் சுட்டுவது
Ø "இ" கரம் -அண்மைச் சுட்டாக பயன்படுகிறது.
எ.கா
இப்பையன்,இப்பள்ளி,இவன்,இது,இவள்
சேய்மைச்சுட்டு:-
Ø தொலைவில் உள்ள ஒன்றைச் சுட்டுவது
Ø "அ " கரம் -சேய்மைச் சுட்டாக பயன்படுகிறது.
எ.கா
அந்த வீடு,அந்த மரம்,அவன்,அவள்,அவர்கள்
0 Comments