பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்-பகுதி-4
ஓ
1. ஓங்கு/ஓழ்க -உயர்
2. ஓரால் -நீக்குதல்
3. ஒன்னார் -பகைவர்
4. ஓரிஇ -நீக்கி
5. ஓர்ந்துணர்தல்- ஆராய்ந்து அறிதல்
ஒள
6. ஒளதடம் – அமிழ்தம்
க
7. கடி -விரைவு /மணம்
8. கடிது-விரைவாக
9. கடு -நஞ்சு
10. கரி -யானை /கன்று /நஞ்சு /மூங்கில்
11. கமுகு -பாக்கு
12. கடறு-காடு/ பாலைநிலம்
13. கனிவு-இரக்கம்
14. கடம் -காடு/கடன்
15. கடிந்த -நீக்கிய
16. கடாம் -மதம் /ஒலி
17. கடிமாலை-மணிமாலை /மணமாலை
18. கலித்தல்-ஒலித்தல்
19. கழறுதல் -கூறுதல்/திட்டுதல்
20. கஞ்சம்-தாமரை /வஞ்சகம்
21. கள்-தேன்
22. களிகூர -மகிழ்ச்சி பொங்க
23. களி-மகிழ்ச்சி
24. களஞ்சியம் -தானியம் சேர்க்கும் இடம்
25. கவின்-அழகு
26. கருமம் -செயல்/கடமை
27. கல்-மலை/கற்றல்
28. கலாபம் -மயில் தோகை
29. கலிங்கம்-ஆடை
30. கழை-மூங்கில்
31. கடா -எருமைக்கடா /வினா
32. கயல்-மீன்
33. கதம் -சினம்
34. கழனி-வயல்
35. கனகம்-தங்கம் /பொன்
36. கழகம் -சங்கம்
37. கன்னல்-கரும்பு /இனிமை
38. கட்டளை -ஆணை /உரைகல்
39. கட்டியம் -கூத்து வகை /புகழ்ந்து பேசல்
40. கங்கு -தணல்/வஞ்சம்
41. கசடு-குற்றம்/பழுது
42. களபம் - யானை/கலவைச் சோறு
43. களிறு -ஆண் யானை
44. கவி -பாடல்/குரங்கு
45. கலை-நுண்கலை /ஆண் மான்
46. கறி-உணவு/மிளகு
47. கயமை-கீழ்மை
48. கலம்-உறுதி/கப்பல்/குடம்/பாத்திரம் /உண்கலம் /அணி
49. கண் -குளிர்ச்சி
50. கந்தன் -முருகன்
51. கழுத்து -பிடரி
52. கருணை-அருள்
53. கதிரவன்-சூரியன்
54. கனல்-நெருப்பு
55. கரம்-கை
56. கல்லளை- கற்குகை
57. களவு-திருட்டு
58. கவர்ந்து-திருடி
59. கவர்தல் -பறித்தல்
60. களம்-இடம்
61. கடக்க-வெல்ல
62. கழறு-கூறு
63. கழரும்-பேசும்
64. கடன்-கடமை
65. கங்குல் -இரவு
66. கதழ்வு-பகைமை
67. கருத்தன் -இறைவன்
68. கடாஅ யானை -மதக்களிறு
69. கணிகை- பொது மகள்
70. களையும்-நீக்கும்
71. கழி-உப்பங்கழி
72. களைதல்-நீக்குதல்
73. கவிகை-கொடை
74. கவை-பிளந்த
75. கமலம்-தாமரை
76. கல்மிதப்பு -தெப்பம்
77. கழல் -திருவடி
78. கடைமணி -ஆராய்ச்சிமணி
79. கண்டம்-கழுத்து
80. கந்துகம்-பந்து
கா
81. கா -சோலை
82. காதல் - அன்பு
83. காவலன்-மன்னன்
84. காளை-எருது
85. காமரு -விரும்பத்தக்க
86. காயம் -புண் /உடல்
87. காப்பு-காவல்
88. காரி- வள்ளல்/கருநிலைக்காளை
89. காத்து -அடக்கி
90. காசு- பணம்/குற்றம்/அழுக்கு
91. கால்-காற்று
92. காலன் -மாயன்/கூற்றுவன் /எமன்
93. கானம்/கானல்/ கான்/காட்டகம் -காடு
94. கார்-கருமை/மேகம்/எருமை/மலை
95. காரிகை -பெண்
96. காடவர் -பல்லவர்
97. காசினி -நிலம்/பூமி
98. காணம்-பொற்காசு /பொன்
கி
99. கிள்ளி -சோழன்
100. கிளை -சுற்றம் /பிரிவு/தளிர் ஓ
0 Comments