பொருத்தமான  பொருளை தேர்வு செய்தல் (பகுதி– 10) 

பு

1. புனைந்துரை-வருணனை 

2. புல் என்னும் -பொலிவு இழக்கும்

3. புகழ்-இசை 

4. புல்லிதழ்-புறவிதழ்

5. புகன்றாள் -கூறினாள்

6. புலால் -இறைச்சி 

7. புளகிதம் -மகிழ்ச்சி 

8. புல்லார்-பற்றாதவராய் 

9. புன்கண் -துன்பம் 

10. புன்மை -இழிந்த தன்மை

பூ 

11. பூண்டு -அணிந்து /உணவுப்பொருள் 

12. பூசை-வழிபாடு 

13. பூமகள் -திரு மகள் 

14. பூசல்-பகைமை 

15. பூதலம் -உலகம் 

16. பூசி -வழிபடு/மெழுகி

17. பூண்டைனை -அணிந்துள்ளாய் 

18. பூத்த-மலர்ந்த 

19. பூகம்-பாக்குமரம் 

20. பூதரம்-மாலை 

21. பூதி –திருநீறு

பெ 

22. பெற்றம்-பசு 

23. பெதும்பை -பெண் உருவம் 

24. பெயல் -மழை 

25. பெண்ணை -ஆற்றின் பெயர்/பனை

26. பெயின் -ஏற்றினால் 

27. பெருமை -சிறப்பு/உயர்வு 

28. பெருஞ்சிரம் -பெரிய தலை 

29. பெற்றியார் –தன்மையடையார்

பே

30. பேரி-முரசு 

31. பேதையார் -அறிவிலார் 

32. பேழை -பேட்டி 

33. பேணி-பாதுகாத்து /போற்றி 

34. பேதை -பெண் 

35. பேடை -பெண் பறவை 

36. பேறு-செல்வம் 

37. பேரானந்தம்-பேரின்பம்

பை

38. பை -பாம்புப்படம் 

39. பைங்கூழ் -பசிய பயிர் /பசுமையான பயிர் 

40. பையுள்-துன்பம் /கவலை 

41. பைய –மெல்ல

பொ

42. பொய்கை -குளம் 

43. பொரு-ஒப்புமை

44. பொன்றாது -அழியாது 

45. பொதும்பர் -சோலை/கோழை

46. பொருந்துதல்-வணங்குதல் 

47. பொறுநர்-போர்களம்  பாடும் பாணர் /போரிடுவோர் /பகைவர் 

48. பொருநர்-பகைவர் 

49. பொலம்-பாத்திரம் /அழகு 

50. பொலிவு -அழகு 

51. பொன்னி -காவேரி 

52. பொறை-பொறுமை 

53. பொதிந்து -நிறைந்து 

54. பொருமினர்-வருந்தினர்  

55. பொறி -சோலை 

56. பொலி-தானியக்குவியல்

57. பொய்யா விளக்கம்- அணையா விளக்கு 

58. பொன்றும்-அழியும் /உலகம் அழியும் வரை 

59. பொழில் -சோலை 

60. பொதி அலர் -மலர்ந்த பூ 

61. பொன்-தங்கம் 

62. பொருள்-பாடலின் பொருள்/செல்வம்/இலக்கணம் 

63. பொருது-மோதி 

64. பொருளல்லவர்-தகுதியற்றவர்

போ

65. போகம்-இன்பம் 

66. போதி-அரச மரம் 

67. போது-அரும்பு /மலர்/பொழுது 

68. போழ்தல்-பிளத்தல்

69. போனார் -பகைவர் 

70. போற்றார்-இகழ்பவர்

பௌ 

71. பௌவம் -கடல்/ஆழம்

ம 

72. மயரி-மயக்கம் 

73. மந்த மாருதம் -தென்றல் 

74. மகவு -குழந்தை 

75. மடி-சோம்பல்/இறத்தல் /நோய் 

76. மந்தி-குரங்கு (பெண்)

77. மரை-மான்/புள்ளி

78. மதகு -மடை 

79. மதலை-குழந்தை /துணை 

80. மதியம் -நிலவு 

81. மடந்தை-பெண் 

82. மடமை -அறியாமை 

83. மடவார் -பெண்கள் /அறிவற்றவர்/அறிவிலிகள்  

84. மழு-கோடாரி/மழுவாயுதம் 

85. மழவிடை -இளங்காளை

86. மஞ்ஞை-மயில் 

87. மலர்-பூ

88. மருங்கு-பக்கம்/இடை 

89. மருவு -பொருந்திய /தழுவு 

90. மறுகு-தெரு /அரசவீதி 

91. மல்-மற்போர்

92. மலர்தலை -பரந்த 

93. மதுகரம் -தேன் /வண்டு

94. மதி -அறிவு/நிலவு /முழு நிலவு /சந்திரன் 

95. மதுரம்- இனிமை 

96. மடநாகு-இளைய பசு 

97. மடங்கல்-சிங்கம் 

98. மடல்- கடிதம் 

99. மழலை -குழந்தை 

100. மங்கை -பருவப்பெண்