பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்(பகுதி– 12)
மோ
1. மோகனம் -புன்னகை
2. மோலி- கிரீடம் /மூடி
மௌ
3. மௌலி -கிரீடம்/ மகுடம் /மணிமுடி
ய
4. யவனர் -கிரேக்கர் /ரோமானியர்
யா
5. யா -மரவகை
6. யாய் -என்தாய்
7. யாக்கை -உடல் /உடம்பு
8. யாத்தல்-வடித்தல் /கட்டுதல் /உருவாக்கல்
9. யாழ்-நரம்புக்கருவி
10. யாணர் -புதுவரவு /புது வருவாய்
11. யாமம் -நள்ளிரவு /இரவு
12. யாங்கு -எது /எவை
13. யாவுள -எவை உள்ளன
வ
14. வனப்பு-எழில் /பொலிவு
15. வனிதையர் -மகளிர்
16. வசை-குற்றம்/பழி/இகழ்ச்சி
17. வளவன் -சோழன்
18. வரைவு/வதுவை -திருமணம்
19. வயவேந்து-வலிமை மிகுந்த அரசன் (நளன்)
20. வனம்-காடு
21. வகிர்-பிளவு
22. வளை-சங்கு /பொந்து
23. வரை -மாலை/வரைதல் /மலை /எல்லை
24. வரம்பு -வரப்பு
25. வலவன்-ஓட்டுபவன்
26. வட்டு -சூதாடும் கருவி
27. வசந்தம் -இளவேனில்
28. வகுத்தார் -அமைத்தார்
29. வளி-காற்று
30. வல்லை-விரைந்து
31. வயங்கு -விளங்கு
32. வளமை -செழுமை
33. வடு -தழும்பு
34. வன்மம் -தீராப் பகை
35. வஞ்சித்தல் -ஏமாற்றுதல்
36. வழக்கு -உலக நடை /முறைமை
37. வல்லுநர் -திறமையானவர்
38. வவ்விய -கவர்ந்த
39. வன்மை-வலிமை
40. வண்மை-வள்ளல் தன்மை
41. வண்ணம்-நிறம்/அழகு
42. வள்ளை-உலக்கைப் பாட்டு/உலக்கை
43. வள்ளுகிர்-கூர்மையான நகம்
44. வட்டி -பனையோலைப் பெட்டி
45. வள்ளல் –இராமன்
46. வங்கம் -வங்கக்கடல் /கப்பல்
47. வசி-வசித்தல்
வா
48. வானகம் -தேவலோகம் /காடு
49. வானுலகம் -விண்ணுலகம்
50. வாதை-துன்பம்
51. வாஞ்சை -அன்பு
52. வாளி-அம்பு
53. வாணி-கலைமகள்
54. வாய்மை-உண்மை
55. வாகை-வெற்றி
56. வாலை-இளமை
57. வாசி -பெருமை/வாசித்தல்/குதிரை
58. வாவி-குளம்/பொய்கை
59. வாரம்-சேர்தல்/இன்னிசைப் பாட்டு
60. வாக்கு-சொல்
61. வான்-உயர்ந்த /மழை
62. வாய்முதல் -உதடு
63. வாயசம் -காகம்
64. வாயில் -ஐம்பொறிகள்
வி
65. விபுதர் -புலவர்
66. விழை-விரும்பு
67. விழைதல்-விருப்பம்
68. வித்தை-கல்வி
69. விழுப்பம்/விழுமம் -சிறப்பு /உயர்வு
70. விஞ்சு -மிகுதியாக /மேம்பாடு /அதிகம்
71. விசி-இழுத்துக்கட்டு
72. விரிநீர் -கடல்
73. வியா-பெரிய
74. விரை -மணம்/விரைதல்
75. வித்து -விதை
76. விசும்பு/விண் -வானம்
77. விறல் -வெற்றி
78. விளி-அழை/இறத்தல்
79. விசை -வேகம்
80. விளக்கம் -ஒளி
81. வினை -தொழில்/செயல்
82. விவேகன்-ஞானி
வீ
83. வீறு -ஒளி /பெருமை/வேகம்
84. வீதல்-அழிதல்
85. வீற்றிருக்கை -நல்ல நிலை
வெ
86. வெறி -பித்து
87. வெட்கை-விருப்பம்
88. வெற்பு -மலை
89. வெஃகும் -விரும்பும்
90. வெஃகல் -விரும்புதல்
91. வெய்யோன் -கதிரவன்/கொடியவன் /சூரியன்
92. வெம்மை -கொடுமை/வெப்பம்
93. வெள்கி -நாணி
94. வெறுக்கை -ஊக்கம்
95. வெகுளி -கோபம்
96. வெள்ளம் -நீர் /ஆற்றின் வெள்ளம்
97. வௌவல் -கவர்தல்
98. வெகுளல்-சினத்தல்
வே
99. வேதனை -துன்பம்
100. வேலை-கடல்/பணி
0 Comments