பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்(பகுதி – 2)

1. ஆர்கவி-கடல் 
2. ஆறு-நதி/ நல்வழி/ நெறி எண்
3. ஆலயம்-கோவில் 
4. ஆடவர் -ஆண்கள் 
5. ஆண்டி -துறவி 
6. ஆச்சி -தாய் 
7. ஆயுள்-வாழ்நாள் /வயது 
8. ஆகுலம்-ஆரவாரம் 
9. ஆர்வம் -விருப்பம்
10. ஆண்மை- பெருமை, வீரம் 
11. ஆக்கம்- செல்வம் 
12. ஆதி- முதல் 
13. ஆதவன்-சூரியன் 
14. ஆவி-உயிர் 
15. ஆன்ற-சிறந்த 
16. ஆர் -நிறைந்த 
17. ஆய்வு - ஆராய்ச்சி 
18. ஆரிருள் -நரகம் 
19. ஆர்க்கும் - பிணிக்கும் 
20. ஆனந்தம் -மகிழ்ச்சி 
21. ஆருயிர் - அரிய உயிர்
22. ஆற்றவும்- மிகவும் 
23. ஆற்றுதல்- இல் வாழ்தல்

24. இசை- இராகம்/உடன்பாடு பொருந்து /பண்/புகழ் /பாடல் 
25. இந்து-சந்திரன் 
26. இவுளி-குதிரை 
27. இயல்பு -தன்மை 
28. இன்மை-வறுமை 
29. இஞ்சி -மதில் 
30. இறைஞ்சு- வணங்கு 
31. இந்தனம்- விறகு 
32. இடங்கர் -முதலை 
33. இரத்தல்-யாசித்தல் 
34. இல்- இல்லை/வீடு 
35. இகல்- போர் /மாறுபாடு /பகை 
36. இரவி-சூரியன் 
37. இன்னா/இன்னல் /இடர் /இடையூறு /இடுக்கண் /இடும்பை  -துன்பம் 
38. இழுக்கு-குற்றம் 
39. இருநிலம் -பெரிய பூமி 
40. இமயம் - இமய மலை 
41. இதழ் - உதடு / பூ விதழ் 
42. இல்லார்- வறியர்
43. இணை- சேர் 
44. இணர்- கொத்து
45. இன்மை - வறுமை/ இல்லாமை 
46. இல்லிடம்/இல்லம்- வீடு 
47. இசைந்த - பொருத்தமான 
48. இயைந்த - பொருந்திய 
49. இறவை- ஏணி
50. இறை -கடவுள் / அரசன் 
51. இதயம் - உள்ளம் 
52. இருள் -பகை 
53. இரும் -பெரிய 
54. இலங்கியது - விளங்கியது 
55. இரதம்-தேர்
56. இளவேனில் -வசந்தம் 
57. இலயை-காலங்கள் 
58. இழிவுஇல்- களங்கம் அற்ற 
59. இரிந்திட-விலகிட 
60. இறும்-முறியும் 
61. இறும்பூது -வியப்பு 
62. இடித்தல்-கடிந்துரைத்தல்  
63. இரும்பனை-பெரிய பனைமரம் 
64. இரண்டு - அறமும், இன்பமும் 
65. இளையோன்/இலவல்   -இலக்குவன் 
66. இறைஞ்சினான் - வணங்கினான் 
67. இருத்தி- அமர்வாக

68. ஈ - கொடு 
69. ஈதல் - கொடுத்தல் 
70. ஈரம் - இரக்கம் / அன்பு/ மழை
71. ஈட்டம் -தொகுதி 
72. ஈரிருவர் -நால்வர் 
73. ஈகை -கொடை
74. ஈனும் –தரும்

உ 

75. உறு-மிகுதி 
76. உளவு -ஒற்று 
77. உவகை -மகிழ்ச்சி 
78. உண்டி-உணவு
79. உடைமை -செல்வம் 
80. உப்பல் -கதிரவன் 
81. உரைகல்-கட்டளைக்கல் 
82. உதிரம்- இரத்தம்
83. உடுக்கை -ஆடை/உடை 
84. உகுந்தும் -பெய்தும்
85. உடற்றும் -வருத்தும் 
86. உழை- ஒரு வகை மான்/பக்கம் 
87. உரவு-வலிமை 
88. உரன்-திண்ணிய அறிவு 
89. உகிர் -நகம் 
90. உறுகண் -துன்பம் 
91. உபாயம் -வழிவகை 
92. உறைதல்- தூங்குதல் 
93. உம்பர் -தேவர் 
94. உற்றுழி  -துன்புறும் காலம் 
95. உளைந்தி-வருந்தி 
96. உய்க்கும் -செலுத்தும் 
97. உள்ளம்- ஊக்கம் 
98. உள்ள -நினைக்க 
99. உணர்வு -அறிவு 
100. உவரி-கடல்