பொருத்தமான   பொருளை தேர்வு செய்தல் (பகுதி– 13) 

வே

1. வேம்பன் -பாண்டியன் 

2. வேங்கை -ஒரு மரம் /புலி 

3. வேளிர்-குறுநில மன்னன் 

4. வேய்/வேரல்  -மூங்கில் 

5. வேனல் -அனல் 

6. வேளை-பொழுது 

7. வேழம்-யானை /கரும்பு 

8. வேள்-தலைவன் 

9. வேணி -சடை 

10. வேர்த்தல்-கோபித்தல் 

11. வேதம்-மறை 

12. வேந்தன் /வேந்தர் -அரசன் /அரசர் 

13. வேங்கடம் -திருமலை 

14. வேளாண்மை -விவசாயம் /உதவி

வை 

15. வை-கூர்மை /வைக்கோல் 

16. வையம் -உலகம் 

17. வைகல்-நாள் /நாள்தோறும் 

18. வைபோகம் -மகிழ்ச்சி 

19. வைப்பு-புதையல் 

20. வைகும் -தங்கும்