| ஐயனாரிதனார் |
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே –வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" |
| நக்கீரர் |
"உண்பது நாழி உடுப்பவை ரெண்டே "(புறநானூறு) |
| "செல்வத்துப் பயனே ஈதல் " (புறநானூறு) |
| கணியன் பூங்குன்றனார் |
"யாதும் ஊரே யாவரும் கேளிர் "(புறநானூறு) |
| “தீதும் நன்றும் பிறர்தர வாரா”( புறநானூறு) |
| “பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை
இகழ்தலும் அதனினும் இலமே”( புறநானூறு) |
| குடப்புலவியனார் |
“உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்பது நாழி , உடுப்பவை இரண்டே” (புறநானூறு) |
| நரிவெரூ உத்தலையார் |
“நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது
செய்தல் ஓம்புமீன்”( புறநானூறு) |
| பக்குடுக்கை நண்கணியார் |
“இன்னாது அம்ம இவ்வுலகம்” ( புறநானூறு) |
| கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி |
“உண்டால் அம்ம இவ்வுலகம்” ( புறநானூறு) |
| "தமக்கென முயலா நோன்தான் பிறர்க்கென முயலுநர் உண்மையானே " |
| பொன்முடியார் |
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே"( புறநானூறு) |
| பாண்டியன் அறிவுடை நம்பி |
"மயக்குறு மக்களை இல்லோர்க்கும் பயக்குறை இல்லை ( புறநானூறு)
|
| மதுரை இளநாகனார் |
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்( புறநானூறு) |
| கோவூர்க்கிழார் |
அறவே ஆயின் நினதுஎனக் திறத்தல் ,மறவை ஆயின் போரொடு திறத்தல்( புறநானூறு)
|
| புறநானூறு |
மன்னவன் உயிர்த்தே மலர் தலை உலகம் |
| ஒளவையார் |
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு |
| அரிது அரிது மானிடராதல் அரிது |
| “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” |
| ஆத்தி சூடி:-
அறம் செய்ய விரும்பு,
ஆறுவது சினம்,
இயல்வது கரவேல் ,
ஈவது விலக்கேல்,
உடையது விளம்பேல்,
ஊக்கமது கைவிடேல்,
எண் எழுத்து இகழேல் ,
ஏற்பது இகழ்ச்சி,
ஐயம் இட்டு உண்,
ஒப்புரவு ஒழுகு,
ஓதுவது ஒழியேல்,
ஒளவியம் பேசேல் ,
அஃகம் சுருக்கேல்
|
| அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் |
| குற்றம் பார்க்கின் சுற்றமில்லை |
| சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் |
| பசி வந்திடப் பத்தும் பறக்கும் |
| ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ ? |
| மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் |
| சாதி இரண்டொழிய வேறில்லை |
| ஊருடன் கூடி வாழ் |
| பசித்து புசி |
| நாடாகு ஒன்றோ ;காடாகு ஒன்றோ ;
அவலாகு ஒன்றோ ; மிசையாகு ஒன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே ! ( புறநானூறு)
|
| கலித்தொகை |
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் |
0 Comments