புகழ் பெற்ற ஆசிரியர்களின் மேற்கோள்கள்-(பகுதி–2)
ஆசிரியர் | முக்கிய மேற்கோள் |
இளங்கோவடிகள்(நூல் – சிலப்பதிகாரம்) | அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்6. |
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் | |
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் | |
மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பு தேனே | |
ஈன்று குழந்தை எடுத்து வளர்க்குதூஉம் சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல் | |
வானவர் உறையும் மதுரை வளம்கொளத் td> | |
பதிஎழு அறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு | |
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் | |
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று | |
கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு - பாண்டியன் கூறியது | |
காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன் !- - கண்ணகி கூறியது | |
கள்வனோ அல்லன்; கருங்காயற்கண் மாதராய்! | |
யானோ அரசன் ? யானே கள்வன் !- பாண்டியன் கூறியது | |
பொற்றொடி ஏவப், புகை அழல் மண்டிற்றே நற்றே ரான் கூடல் நகர் - மதுரை தீப்பிடித்து எரிதல் | |
நிறைமதி வாள்முகம் கன்றியது - கோவலன் கண்ணகியிடம் கூறியது | |
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் - கண்ணகி | |
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்- வேண்மாள் கூறியது | |
போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றம்- கண்ணகியின் சிறப்பு | |
மண்தேய்த்த புகழினான்- கோவலனின் சிறப்பு | |
ஐஅரி உண்கண் அழுதுஏங்கி - கோவலன் கண்ணகியிடம் கூறியது | |
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து, நடுங்குதுயர் உறுத்தப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் | |
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள | |
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி | |
திங்களை போற்றுதும் !, திங்களை போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண் – (மங்கலப் பாடலின் முதல்வரி ) | |
காரைக்கால் அம்மையார் | அறிவானும் தானே அறிவிப்பானும் தானே |
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்-- பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் வேண்டுவதாகச் சேக்கிழார் கூறியது | |
திருநாவுக்கரசர் | நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் |
சம்பந்தர் | "நல்லவர்க்கில்லை நாளும் கோளும்" |
திருமூலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன் |
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் | |
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் | |
அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார் | |
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் | |
குமர குருபரர் | கல்வி அழகே அழகு |
சிந்தையின் நிறைவை செல்வம் | |
பிரமன் படைப்பிலும் புலவன் படைப்பு பெருமையுடையது | |
ஆண்டாள் | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் |
இராமலிங்க அடிகளார் | வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் |
பசித்திரு,தனித்திரு, விழித்திரு | |
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிக் போக | |
எல்லாரும் வாழ்க இசைந்து | |
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை | |
அம்பலப்பாட்டை அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு | |
பாரதியார் | யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம். |
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே | |
மனதில் உறுதி வேண்டும் | |
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல், சாதல், சாதல் | |
தனிஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் | |
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | |
ஓடிவிளையாடு பாப்பா | |
தையலை உயர்வு செய் | |
பெண் விடுதலை வேண்டும் | |
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் | |
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைக்கொட்டிச் சித்திரம் | |
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ | |
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லலென்றன் மூச்சை நிறுத்தி விடு | |
இரு பொறுப்பதில்லை - தம்பி எரிதழல் கொண்டுவா | |
உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி | |
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் | |
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் | |
ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை சாதியில் | |
காக்கை குருவி எங்கள் சாதி | |
செந்தமிழ் நாடெனும்போதினிலே | |
சிந்து நதியின் மேல் | |
நெஞ்சு பொறுக்குது இலையே | |
செப்புமொழி பதினெட்டுடையாயெனில் சிந்தனையொன்றுடையாள் | |
ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி | |
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போந்துவம் இஃதை எமக்கிலை ஈடே | |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் | |
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் | |
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் | |
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் | |
காக்கை சிறகினிலே நந்தலாலா | |
ஜெய பேரிகை கொட்டடா | |
நெஞ்சமின்றி நேர்மை திரமுமின்றி வந்தனை சொல்லில் வீரரடி | |
கல்வியில் சிறந்த தமிழ்நாடு | |
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் | |
கொட்டு முரசே கொட்டு முரசு | |
முப்பது கோடி முகமுடையாள் | |
வெள்ளிப் பனிமலையில் மீது உலாவுவோம் | |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | |
எல்லாரும் இந்நாட்டு மன்னர் | |
0 Comments