பிரித்தெழுதுக (Part -6)

நா

1. நாட்டபிமானம் -நாடு+அபிமானம் 
2. நாடெங்கும் -நாடு+எங்கும் 
3. நாட்டொரு -நாடு+ஒரு 
4. நானொன்று - நான்+என்று 
5. நாவாயசைத்த -நாவை+அசைத்த 
6. நாற்கூற்று- நான்கு+கூற்று 
7. நானிலம்-நான்கு+நிலம் 
8. நாற்பொருள்- நான்கு+பொருள்
9. நாண்மதி- நாள்+மதி 
10. நாயடியேன் - நாய்+அடியேன்  
11. நாலடியார்-நான்கு+அடி+ஆர் 
12. நாத்தொலைவில்லை-நா+தொலைவு+இல்லை
13. நாள்மலர்-நாள்+மலர் 
14. நாமென்றும்-நாம்+என்றும்

நி

15. நின்றுடற்றும் -நின்று+உடற்றும் 
16. நிறையுடைமை-நிறை+உடைமை
17. நின்றுயிர்க்கு- நின்று+உயிர்க்கு 
18. நின்றுலகம்- நின்று+உலகம் 
19. நிறையுடை-நிறை+உடை 
20. நின்னருள்- நின்+அருள் 
21. நினைவலைகளில் - நினைவு+அலைகளில் 
22. நிலாவொளி - நிலா+ஒளி 
23. நிகரற்ற -நிகர்+அற்ற 
24. நிலத்தறைந்தான்-நிலைத்து+அறைந்தான் 
25. நிலம்போல-நிலம்+போல 
26. நிற்றென்றும்- நின்று+என்றும் 
27. நிற்பதொன்றில் - நிற்பது+ஒன்று+ இல் 
28. நிலத்தோடொட்டலரிது - நிலத்தோடு+ஒட்டல்+ அரிது   

நீ 

29. நீடாலயம் - நீடு+ஆலயம் 
30. நீரதன்- நீர்+அதன் 
31. நீணிலம்-நீள்+நிலம் 
32. நீர்ச்சடை-நீர்+சடை 
33. நீயதை-நீ+அதை 
34. நீட்டோலை - நீட்டு+ஒலை

நு

35. நுனிக்கொம்பர் - நுனி+கொம்பர்

நூ 

36. நூற்றாண்டு -நூறு+ஆண்டு

நெ

37. நெடுங்கடல்-நெடுமை+கடல் 
38. நெடுங்குவடு- நெடுமை+குவடு
39. நெஞ்சுயர்த்தும் -நெஞ்சு+உயர்த்தும் 
40. நெடுங்காலம் -நெடுமை+காலம் 
41. நெடிதுய்க்குமாறு- நெடிது+ உய்க்குமாறு 
42. நெற்கதிர் - நெல்+கதிர் 
43. நெடுநீர்-நெடுமை+நீர் 
44. நெடுநாவாய்- நெடுமை+நாவாய்

நே

45. நேற்றிரவு- நேற்று+இரவு

நோ 

46. நோவதெவன்- நோவது+எவன்  

ப 

47. பஃறீது - பல்+தீது 
48. பன்னிரண்டு-பத்து+இரண்டு 
49. பரிந்தோம்பி-பரிந்து+ஓம்பி
50. பல்லுயிர்க்கும் -பல+உயிர்க்கும் 
51. பண்பிலான் -பண்பு+இலான்
52. பணிந்திலர்- பணித்து+இலர்
53. பதினான்கு-பத்து+நான்கு
54. பழம்பெருமை- பழம்+ பெருமை 
55. படையெடுப்பு-படை+எடுப்பு 
56. படுவதியாது - படுவது+யாது 
57. பயனாக-பயன்+ஆக
58. பத்தாண்டு -பத்து+ஆண்டு 
59. பத்தினிப்பெண்டிர்- பத்தினி+பெண்டிர் 
60. பகலுறை- பகல்+உறை
61. பச்சூன்- பசுமை+ஊன் 
62. பம்பரமாகி - பம்பரம்+ஆகி 
63. பல்கலைகள்-பல்+கலைகள் 
64. பண்ணொன்று -பண்+ஒன்று 
65. பசும்பொன்-பசுமை+பொன்
66. பழந்தமிழ்-பசுமை+தமிழ் 
67. பலவென்று-பல+என்று 
68. பல்பணி-பல்+பணி
69. பற்பல -பல+பல 
70. பழந்தின்றான்-பழம் +தின்றான் 
71. பல்லியாண்டு- பல+ ஆண்டு 
72. பரித்தியாகம்-பரி+தியாகம் 
73. பல்கலை-பல்+கலை 
74. பல்பொருள்-பல+பொருள் 
75. பயனில -பயன்+இல 
76. பற்றில்லேன்-பற்று+இல்லேன்
77. பண்பெனப்படுவது-பண்பு+எனப்படுவது 
78. பண்புடைமை-பண்பு+உடைமை 
79. பண்புடையார்- பண்பு+உடையார் 
80. பயனுடையார்-பயன்+உடையார் 
81. பனையளவு -பனை+அளவு 
82. பகலொன்று-பகல்+ஒன்று 
83. பழந்தான்-பழம்+தான் 
84. பசும்பொற்சுடர்-பசுமை+பொன்+சுடர் 
85. பற்றில்லேன் - பற்று+ இல்+ஏன்
86. பல்பொருணீங்கிய - பல+பொருள்+நீங்கிய  
87. பதிபோலாகம்- பதி+போல்+ஆகம்  

பா 

88. பாசிலை-பசுமை+இலை
89. பாவிசை-பா+இசை 
90. பாசடை-பசுமை+அடை
91. பாற்கடல்-பால்+கடல் 
92. பாரகம்-பார்+அகம் 
93. பாடூன்றும்- பாடு+ஊன்றும் 
94. பாரதத்தாய் -பாரதம்+தாய் 
95. பராபரம்-பரம்+அபரம்
96. பாடாண்திணை-பாடு+ஆண்+திணை

பி 

97. பிறப்பொக்கும் -பிறப்பு+ஒக்கும் 
98. பிரித்தடுக்கி - பிரித்து+அடுக்கி 
99. பிழையாதற்று -பிழையாது+ அற்று 
100. பிறர்க்கார்த்து - பிறர்க்கு + ஆர்த்து