எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

(Part-2)

1. ஆரம்பம் x முடிவு 
2. ஆண்டாள் x அடிமை 
3. ஆகூழ் x போகூழ்
4. ஆக்கம் x அழிவு / கேடு 
5. ஆடம்பரம் x சிக்கனம் 
6. ஆங்கு x ஈங்கு 
7. ஆண்டு x ஈண்டு 
8. ஆகும் x ஆகாது 
9. ஆடவர் x பெண்டிர்
10. ஆண் x  பெண் 
11. ஆண்மை x பெண்மை  

12. இனிய x இன்னா/இன்னாத 
13. இகழ்தல் x புகழ்தல் 
14. இளையோர் x முதியோர் 
15. இணைந்து x பிரிந்து 
16. இம்மை x மறுமை 
17. இரத்தல் x  ஈதல் 
18. இரவலர் x புரவலர் 
19. இலாபம் x  நட்டம்
20. இயற்கை x செயற்கை 
21. இனிப்பு x கசப்பு 
22. இசை x வசை 
23. இணை x  தனி /பிரி 
24. இம்பர் x உம்பர் 
25. இரப்பார்  x ஈவார்
26. இருள் x ஒளி 
27. இறத்தல் x பிறத்தல் 
28. இணக்கம் x பிணக்கம்
29. இன்பம் x துன்பம் /இடுக்கண் 
30. இழிவு x உயர்வு 
31. இடம் x  வலம்
32. இளமை x முதுமை 
33. இறுதி x  தொடக்கம் 
34. இன்சொல் x  புன் சொல் /கொடுஞ் சொல் / வன்சொல் 
35. இல்லை x உண்டு 
36. இழப்பு x  ஆதாயம் 
37. இரவு x பகல் 
38. இருநிலம் x சிறுநிலம் 
39. இன்புற்றார் x துன்புற்றார்

உ 

40. உயர்வு x தாழ்வு 
41. உவத்தல் x காய்தல்
42. உருவம் x அருவம் 
43. உறவு x அயல் /பகை 
44. உறக்கம் x விழிப்பு 
45. உண்மை x பொய்மை 
46. உள்ளே x வெளியே 
47. உள் x வெளி 
48. உயர்ந்த x தாழ்ந்த 
49. உரிமை x அடிமை 
50. உடன்பாடு x மாறுபாடு