TNPSC – Previous year question and answer(Part-3)
1) பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ. மோகனம், மீன்,மையல்,மேகம்
ஆ.மீன்,மையல்,மேகம், மோகனம்
இ.மையல்,மோகனம்,மேகம்,மீன்
ஈ.மீன், மேகம்,மையல்,மோகனம்
விடை:- ஈ.மீன், மேகம்,மையல்,மோகனம்
2)அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை
அ.அறிஞர்கள், கலைஞர்கள், நாவலர்கள்,பாவலர்கள்
ஆ.கலைஞர்கள்,அறிஞர்கள்,பாவலர்கள், நாவலர்கள்
இ.பாவலர்கள்,அறிஞர்கள்,கலைஞர்கள்,நாவலர்கள்
ஈ.அறிஞர்கள்,கலைஞர்கள்,பாவலர்கள்,நாவலர்கள்
விடை:- அ.அறிஞர்கள், கலைஞர்கள், நாவலர்கள்,பாவலர்கள்
3)அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை
அ. திருவாசகம், தேவாரம்,இறைவன்,கடவுள்
ஆ.இறைவன், கடவுள், திருவாசகம், தேவாரம்
இ.தேவாரம்,திருவாசகம், கடவுள்,இறைவன்
ஈ. இறைவன், தேவாரம்,கடவுள்,திருவாசகம்
விடை:- ஆ.இறைவன், கடவுள், திருவாசகம், தேவாரம்
4)சொற்களை ஒழுங்குப்படுத்தி அமைந்த சரியான சொற்றொடரைத் தேர்க
அ. வண்ணங்கள் அவ்வேறுபாடு வாழ்க்கையில் வேறுபட்டால் வேறுபாடாகாது.
ஆ.வண்ணங்கள் வேறுபட்டால் அவ்வேறுபாடு வாழ்க்கையில் வேறுபாடாகாது
இ. அவ்வேறுபாடு வேறுபாட்டால் வாழ்க்கையில் வண்ணங்கள் வேறுபாடாகாது
ஈ.வேறுபாடாகாது வாழ்க்கையில் அவ்வேறுபாடு வண்ணங்கள் வேறுபாட்டால்
விடை:-ஆ.வண்ணங்கள் வேறுபட்டால் அவ்வேறுபாடு வாழ்க்கையில் வேறுபாடாகாது
5)சொற்கள் ஒழுங்குபட்ட தொடரைத் தேர்க
அ. வள்ளுவர் இயற்றிக் குறளைத் தந்தார்
ஆ.வள்ளுவர் குறளை தந்தார் இயற்றி
இ. வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
ஈ.குறளைஇயற்றி தந்தார் வள்ளுவர்
விடை:-இ. வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
6)சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடர் ஆக்குதல்
அ. தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
ஆ. மகனுக்கு அறிவுரை வழங்கினார் தந்தை
இ. அறிவுரை தந்தை மகனுக்கு வழங்கினார்
ஈ.வழங்கினார் மகனுக்கு அறிவுரை தந்தை
விடை:- அ. தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
7)சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடர் ஆக்குதல்
அ. கோயிலும் சிறந்த தாயிற் இல்லை
ஆ.சிறந்த தாயிற் கோயிலும் இல்லை
இ.இல்லை கோயிலும் சிறந்த தாயிற்
ஈ.தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
விடை:- ஈ.தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
8) முறையாக அமைந்த சொற்றொடர்
அ. வேண்டும் சீர்பெற நாடு
ஆ.நாடு சீர்பெற வேண்டும்
இ.நாடு வேண்டும் சீர்பெற
ஈ.சீர்பெற நாடு வேண்டும்
விடை:- ஆ.நாடு சீர்பெற வேண்டும்
9)பெயர் சொல்லின் வகையறிக -வருதல்
அ. பொருட்பெயர்
ஆ.குணப்பெயர்
இ.தொழிற்பெயர்
ஈ.இடப்பெயர்
விடை:- இ.தொழிற்பெயர்
10)பின்வரும் பெயர்ச்சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக-வெண்மை
அ.காலப்பெயர்
ஆ.பண்புப்பெயர்
இ.பொருட்பெயர்
ஈ.இடப்பெயர்
விடை:-ஆ.பண்புப்பெயர்
11) பெயர்ச்சொல்லின் வகை அறிதல்-தாமரை
அ. பொருட்பெயர்
ஆ.பண்புப்பெயர்
இ.சினைப்பெயர்
ஈ.காலப்பெயர்
விடை:- அ. பொருட்பெயர்
12)தலை-என்ற பெயர்ச்சொல்லின் வகை
அ. பொருட்பெயர்
ஆ.இடப்பெயர்
இ.காலப்பெயர்
ஈ.சினைப்பெயர்
விடை:- ஈ.சினைப்பெயர்
13)பெயர்ச்சொல்லின் வகை அறிந்து தேர்வு செய்க-மதுரை
அ. காலப்பெயர்
ஆ.இடப்பெயர்
இ.சினைப்பெயர்
ஈ. தொழிற்பெயர்
விடை:- ஆ.இடப்பெயர்
14)இலக்கணக் குறிப்பு தேர்ந்தெடுக்க -பேரொளி
அ. வினைத்தொகை
ஆ.பண்புத்தொகை
இ. வினையெச்சம்
ஈ.உம்மைத்தொகை
விடை:-ஆ.பண்புத்தொகை
15)வந்த என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பை தேர்ந்தெடு
அ. பண்புத்தொகை
ஆ.வினைமுற்று
இ. வினையெச்சம்
ஈ.பெயரெச்சம்
விடை:-ஈ.பெயரெச்சம்
16)வருபனி-இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடு
அ. வியங்கோள் வினைமுற்று
ஆ. வினையெச்சம்
இ. வினைத்தொகை
ஈ.தொழிற்பெயர்
விடை:- இ. வினைத்தொகை
17)இலக்கணக் குறிப்பு அறிதல்-பசிப்பிணி
அ. பண்புத்தொகை
ஆ.உருவகம்
இ.வினைத்தொகை
ஈ.உவமைத்தோகை
விடை:- ஆ.உருவகம்
18) இலக்கணக் குறிப்பு அறிதல்-தீதும் நன்றும்
அ. உயர்வு சிறப்பும்மை
ஆ.முற்றும்மை
இ.எண்ணும்மை
ஈ.இழிவு சிறப்பும்மை
விடை:- இ.எண்ணும்மை
19)விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி ஏற்றினான்
அ.கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான் ?
ஆ.கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி ஏற்றினான் ?
இ.கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி ஏற்றினானா?
ஈ.கரிகாலன் இமயத்திலா புலிக்கொடி ஏற்றினான்?
விடை:- அ.கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான் ?
20)அறிஞர் ஜி.யு.போப் திருவாசகத்தை மொழி பெயர்த்தார் -இவ்விடை வருவதற்கு ஏற்ற வினா எது ?
அ.ஜி.யு.போப் என்பவர் யார்?
ஆ.ஜி.யு.போப் எதனை எழுதினார்?
இ.திருவாசகத்தைப் போப் என்ன செய்தார்?
ஈ.ஜி.யு.போப் எதனை மொழி பெயர்த்தார் ?
விடை:-ஈ.ஜி.யு.போப் எதனை மொழி பெயர்த்தார் ?
21) சித்த மருத்துவத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது -இவ்விடைக்கு ஏற்ற வினாவைத் தேர்வு செய்க
அ.சித்த வைத்தியத்தில் உணவு பற்றிக் கூறப்படுவது யாது?
ஆ.சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தி யாது ?
இ.வியப்புக்குரிய செய்தி யாது ?
ஈ.மருந்து பற்றிக் கூறப்படும் செய்தி யாது?
விடை:- ஆ.சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தி யாது ?
22)கரிகாற் சோழன் கல்லணையைக் கட்டினான் - இவ்விடைக்கு ஏற்ற வினாவைத் தேர்வு செய்க
அ. கல்லணையைக் கட்டியவன் யார்?
ஆ.கல்லணை யாரால் கட்டப்பட்டது ?
இ.கல்லணையைக் கரிகாலன் கட்டினானா ?
ஈ.கல்லணையைப் பாண்டியன் கட்டினானா ?
விடை:- அ. கல்லணையைக் கட்டியவன் யார்?
23)எவ்வகைச் சொற்றொடர் எனக் குறிப்பிடுக
என்னே தமிழர்கள் ஆங்கில மொழி அடிமையாக வாழ்கின்றனர்
அ. செய்தி வாக்கியம்
ஆ.கட்டளை வாக்கியம்
இ.உணர்ச்சி வாக்கியம்
ஈ. வினா வாக்கியம்
விடை:- இ.உணர்ச்சி வாக்கியம்
24)எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
நாதன் தேநீர் அருந்துவது இல்லை
அ. எதிர்மறை வாக்கியம்
ஆ.உடன்பாட்டு வாக்கியம்
இ. கலவை வாக்கியம்
ஈ.தொடர் வாக்கியம்
விடை:-அ. எதிர்மறை வாக்கியம்
25)கடையில் குடை வாங்கி தா-வாக்கியத்தின் வகை தேர்க
அ. உடன்பாட்டு வாக்கியம்
ஆ.எதிர்மறை வாக்கியம்
இ. கட்டளை வாக்கியம்
ஈ.தொடர் வாக்கியம்
விடை:-இ. கட்டளை வாக்கியம்
26)நேற்று மழை பெய்தது - வாக்கியத்தின் வகை கண்டறிக
அ. உணர்ச்சி வாக்கியம்
ஆ. கட்டளை வாக்கியம்
இ. எதிர்மறை வாக்கியம்
ஈ.செய்தி வாக்கியம்
விடை:- ஈ.செய்தி வாக்கியம்
27)எவ்வகை வாக்கியம் என்பதைத் தேர்வு செய்க
நாம் சுதந்திரத்தைப் பேணிப் காக்கிறோம்
அ. செய்வினை வாக்கியம்
ஆ.தன்வினை வாக்கியம்
இ.பிறவினை வாக்கியம்
ஈ.செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை:- அ. செய்வினை வாக்கியம்
28) எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக-
சான்றோர்களைச் சந்தித்துப் பழகு
அ. செய்வினை
ஆ.கட்டளை
இ.செயப்பாட்டு வினை
ஈ.உணர்ச்சி வாக்கியம்
விடை:- ஆ.கட்டளை
29)தாய்,மகளை அறிவுரை சொல்லித் திருத்தினாள்
இது எவ்வகை வினை வாக்கியம் ?
அ.செயப்பாட்டு வினை வாக்கியம்
ஆ.செய்வினை வாக்கியம்
இ.தன்வினை வாக்கியம்
ஈ.பிறவினை வாக்கியம்
விடை:- ஈ.பிறவினை வாக்கியம்
30)திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது-எவ்வகை வினை வாக்கியம்?
அ.தன்வினை
ஆ.பிறவினை
இ.செய்வினை
ஈ.செயப்பாட்டு வினை
விடை:-ஈ.செயப்பாட்டு வினை
31) உவமையால் விளக்கப் பெறும் பொருள் அறிதல்
திங்களை நாய் குறைத்தற்று
அ.இயலும் செயல்
ஆ.இயலாத செயல்
இ.பயனுள்ள செயல்
ஈ.பயனில்லாத செயல்
விடை:- ஈ.பயனில்லாத செயல்
32)மண்ணுக்குள், மறைந்திருக்கும் நீரைப் போல-என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் பொருள்
அ. கல்வி
ஆ.நுண்ணறிவு
இ.நுண்ணறிவைத் தூண்டும் கல்வி
ஈ.கல்லாமை
விடை:- ஆ.நுண்ணறிவு
33)உவமையால் விளக்க பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
மோப்பக் குழையும் அனிச்சம் - அனிச்சம்
அ. உறவினர்
ஆ.விருந்தினர்
இ.பக்கத்து வீட்டுக்காரர்
ஈ. உறவினரல்லார்
விடை:- ஆ.விருந்தினர்
34)தொட்டனைத் தூறும் மணற்கேணி போல- இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம் ) ஏது?
அ. ஆற்றல் பெருகும்
ஆ.அறிவு பெருகும்
இ. இன்பம் குறையும்
ஈ.துன்பம் குறையும்
விடை:-ஆ.அறிவு பெருகும்
35)மோனைத் தொடை அறிதல்
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கோலோ
வன்சொல் வழங்கு வது
அ. இன்சொல், இனிதீன்றல்
ஆ.இன்சொல் ,வன்சொல்
இ. வன்சொல்,எவன்கோலோ
ஈ.காண்பான், எவன்கோலோ
விடை:-அ. இன்சொல், இனிதீன்றல்
36)மோனையைக் கண்டு தேர்க
தென்றல் மணக்கும் மேடையெல்லாம்
தெய்வம் மணக்கும் செய்யுளெலாம்
அ. தென்றல், மணக்கும்
ஆ.தென்றல், தெய்வம்
இ. மணக்கும், மேடையெல்லாம்
ஈ.தெய்வம், மணக்கும்
விடை:- ஆ.தென்றல், தெய்வம்
37)எதுகையை எடுத்தெழுது
வெந்தழற் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக்
கெட்டேன்.
அந்தமில் புகழா னன்புக் களவின்மை கண்டே
னென்று
அ. வெந்தழல், அந்தமில்
ஆ.சுடர்வாள், வேந்தனை
இ.கண்டே, னென்று
ஈ.சுடர்வாள்,கண்டேன்
விடை:- அ. வெந்தழல், அந்தமில்
38) கீழ்க்காணும் அடிகளில் காணப்பெறும் இயைபினைக் காண்க
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
அ.எங்கள்-பேச்சினிலே
ஆ.எங்கள்-சக்தி
இ.பேச்சினிலே-மூச்சினிலே
ஈ.பேச்சினிலே-பிறக்குது
விடை:-இ.பேச்சினிலே-மூச்சினிலே
39) பின்வரும் பாலில் பயின்றுள்ள இயைபுகளைக் குறிப்பிடுக
எல்லோரும் இன்பமுறல் வேண்டும் வேண்டும்
என்றென்றும் தமிழாட்சி செய்தல் வேண்டும்
நல்லதமிழ் தமிழரெலாம் பேசல் வேண்டும்
நந்தமிழில் அறிவியலைச் சேர்த்தல் வேண்டும்
அ.இன்பமுறல், வேண்டும்
ஆ.எல்லோரும் ,என்றென்றும்
இ.வேண்டும் ,வேண்டும் ,வேண்டும் ,வேண்டும்
ஈ.அறிவியலைச் சேர்த்தல் வேண்டும்
விடை:- இ.வேண்டும் ,வேண்டும் ,வேண்டும் ,வேண்டும்
40)சோறு மணக்கும் மடங்களெல்லாம்
தொங்கல் மறைக்கும் தோள்களெல்லாம்
இயைபினைத் தேர்வு செய்க
அ.சோறு-தொங்கல்
ஆ.மறைக்கும்-மணக்கும்
இ.எலாம்-எலாம்
ஈ.மறைக்கும்-மடங்கள்
விடை:-இ.எலாம்-எலாம்
41) பொருத்தமான பொருளைத் தேர்க
1 பெரிய புராணம் அ) இராம காதை
2. கம்ப ராமாயணம் ஆ)முப்பால்
3.சிலப்பதிகாரம் இ) திருத்தொண்டர் புராணம்
4. திருக்குறள் ஈ) முத்தமிழ் காப்பியம்
1 2 3 4
a இ ஆ ஈ அ
b ஈ அ ஆ இ
c இ அ ஈ ஆ
d அ ஆ இ ஈ
விடை:- c இ அ ஈ ஆ
42)பொருத்தமான பொருளைத் தேர்க
நூல் நூலாசிரியர்
1 இராமாயணம் அ) கணிமேதாவியார்
2. இயேசு காவியம் ஆ)காரியாசன்
3.ஏலாதி இ) கம்பர்
4. சிறுபஞ்சமூலம் ஈ) கண்ணதாசன்
1 2 3 4
a ஆ அ இ ஈ
b இ ஈ அ ஆ
c ஈ இ ஆ அ
d அ ஆ ஈ இ
விடை:-b இ ஈ அ ஆ
43)பொருத்தமான பொருளைத் தேர்க
1 இடர் அ)புகழ்
2.இசை ஆ)துன்பம்
3.புயல் இ) மீன்
4. கயல் ஈ)மேகம்
1 2 3 4
a ஆ அ ஈ இ
b இ ஈ அ ஆ
c ஈ இ ஆ அ
d அ ஆ இ ஈ
விடை:-a ஆ அ ஈ இ
44)பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1 கள்ளோ காவியமோ அ) மு. மேத்தா
2.கண்ணீர் பூக்கள் ஆ)மீரான்
3.சாய்வு நாற்காலி இ) கண்ணதாசன்
4.அர்த்தமுள்ள ஈ) மு.வரதராசனார்
இந்துமதம்
1 2 3 4
a அ இ ஈ ஆ
b ஆ இ ஈ அ
c ஆ இ அ ஈ
d ஈ அ ஆ இ
விடை:-d ஈ அ ஆ இ
45)பொருத்துக
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1 மகாபாரதம் அ) செயங்கொண்டார்
2.சிந்தாமணி ஆ)வேதவியாசர்
3.மணிமேகலை இ) திருத்தக்க தேவர்
4.கலிங்கத்துப் பரணி ஈ)சீத்தலைச் சாத்தனார்
1 2 3 4
a அ இ ஈ ஆ
b ஆ இ ஈ அ
c அ ஆ இ ஈ
d ஆ இ ஈ அ
விடை:-b ஆ இ ஈ அ
46)பொருத்துதல் -பொருள் கூறல்
நூல் நூலாசிரியர்
1 சிறுபஞ்சமூலம் அ)கணிமேதாவியார்
2.பழமொழி ஆ)காரியாசான்
3.ஏலாதி இ) சீத்தலைச் சாத்தனார்
4.மணிமேகலை ஈ)முன்றுறையரையனார்
1 2 3 4
a அ இ ஈ ஆ
b ஈ ஆ அ இ
c இ அ ஈ ஆ
d ஆ ஈ அ இ
விடை:-d ஆ ஈ அ இ
47)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியவர்
அ. பட்டணத்தடிகள்
ஆ.சேக்கிழார்
இ.திருமூலர்
ஈ.கணியன் பூங்குன்றனார்
விடை:- ஈ.கணியன் பூங்குன்றனார்
48) தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
கல்வியில் பெரியவர் என்று பாராட்டப்படுபவர்
அ.இளங்கோவடிகள்
ஆ.மாணிக்கவாசகர்
இ.கம்பர்
ஈ.வீரமாமுனிவர்
விடை:-இ.கம்பர்
49) தொடரும் தொடர்பும் அறிதல்
புரட்சிக் கவிஞர் என்று பாராட்டப்படுபவர்
அ.பாரதியார்
ஆ.சுரதா
இ.வள்ளலார்
ஈ.பாரதிதாசன்
விடை:- ஈ.பாரதிதாசன்
50)பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர்
அ.பாரதியார்
ஆ.கவிமணி
இ.வள்ளுவர்
ஈ.திருமூலர்
விடை:-இ.வள்ளுவர்
0 Comments