TNPSC TAMIL  – previous year question and answer(Part-2)

1.பின்வருவனவற்றுள் பொருந்தாத சொல் எது ?

அ. குதிரைப்படை 

ஆ. யானைப்படை 

இ. ஒட்டகப்படை 

ஈ. தேர்ப்படை 

விடை:-இ. ஒட்டகப்படை


2. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக

அ. அர்ச்சுணன்

ஆ.தருமன் 

இ.இராமன் 

ஈ.சகாதேவன் 

விடை:- இ.இராமன் 


3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக 

அ. விண்மீன் 

ஆ.கோள்

இ.விண்கலன்

ஈ. பூமி 

விடை:- ஈ. பூமி 


4. சந்திப்பிழைகளை நீக்கிக் குறிப்பிடுக  

அ. வாழைபழம்  காய்கறிகடை  

ஆ.வாழைப்பழம்  காய்கறிக்கடை 

இ. வாழைப்பழம் காய்க்கறிக்கடை 

ஈ. வாழைப்பழம் காய்க்கறிகடை 

விடை:-ஆ.வாழைப்பழம்  காய்கறிக்கடை 


5. சந்திப் பிழையை நீக்குக 

அ. திருவளர்செல்வன் 

ஆ.திருவளர்ச்செல்வன்

இ. திருவளற்ச் செல்வன் 

ஈ.திருவாளர்ச் செல்வன் 

விடை:- அ. திருவளர்செல்வன் 


6. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க 

அ. கலை சொற்கள் 

ஆ. கலை சொர்க்கள் 

இ. கலைச் சொற்கள் 

ஈ. கலைச் சொற்க்கள் 

விடை:-  இ. கலைச் சொற்கள் 


7. சந்திப் பிழையற்ற சொற்தொடரைத் தேர்வு செய்க 

அ. கற்க கசடற எனக் கூறினார் 

ஆ.கற்கக் கசடற எனக் கூறினார்

இ.கற்க கசடற என கூறினர் 

ஈ.கறக்க கசடற எனக் கூறினார் 

விடை:- அ. கற்க கசடற எனக் கூறினார் 


8. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத்  தேர்வு செய்க 

அ. இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன 

ஆ.இருபாற்ப் பிள்ளைத் தமிழ் உள்ளன  

இ. இருபாற் பிள்ளை தமிழ் உள்ளன   

ஈ. இருப்றாப் பிள்ளை தமிழ் உள்ளன  

விடை:-அ. இருபாற் பிள்ளைத் தமிழ் உள்ளன 


9. ஒருமைப் பன்மைப் பிழை நீக்கம் 

அ. குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடியது 

ஆ.குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடும் 

இ. குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடுகின்றன 

ஈ. குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடுகின்றது 

விடை:-இ. குதிரைகள் மைதானத்தில் வேகமாக ஓடுகின்றன 


10. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் காண்க 

அ. ஆடுகள் ஓடியது 

ஆ.ஆடுகள் மேய்ந்தது 

இ. ஆடுகள் ஓடின 

ஈ.ஆடுகள் நின்றது 

விடை:- இ. ஆடுகள் ஓடின


11) ஒருமைப் பன்மைப் பிழையை நீக்குக 

அ. மாடுகள் மேய்ந்தன 

ஆ. மாடுகள் மேய்ந்தது  

இ. மாடு மேய்ந்தன 

ஈ. மாடு மேய்ந்த 

விடை:-அ. மாடுகள் மேய்ந்தன 


12)வழுஉச் சொல் அற்ற சொற்தொடர் 

அ. இன்னிக்கி சாயங்காலம் தங்கச்சி வரும் 

ஆ.கரும்புத் தோப்புக்கு அருகாமையில் நாய் கத்தியது.

இ.இந்த வேலைக்கு அஞ்சு பேரு வேணுமா ?

ஈ.அண்ணனும் அக்காளும் தம்பியை அன்புடன் வரவேற்றனர் 

விடை:- ஈ.அண்ணனும் அக்காளும் தம்பியை அன்புடன் வரவேற்றனர் 


13) மரபுப் பிழைகளைக் கண்டறிந்து குறிப்பிடுக 

அ. தென்னை ஓலையும் வெப்ப ஓலையும் கொண்டு வந்தான் 

ஆ.தென்னை ஓலையும் வேப்பந் தழையும் கொண்டு வந்தான் 

இ.தென்னங்கீற்றும் வேப்ப ஓலையும் கொண்டு வந்தான் 

ஈ. தென்னங்கீற்றும் வேப்பந்தழையும் கொண்டு வந்தான் 

விடை:- ஈ. தென்னங்கீற்றும் வேப்பந்தழையும் கொண்டு வந்தான் 


14) மரபுப் பிழைகள் வழுஉச் சொற்களை நீக்குதல் -கிளி 

அ. கத்தும்

ஆ.பேசும் 

இ. கரையும் 

ஈ. அகவும்

விடை:-ஆ.பேசும் 


15)பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய் 

அ. இராமன் என் வீட்டிற்க்கு வந்து போனான் 

ஆ.இராமன் என் வீட்டிற்கு வந்து போனான் 

இ. இராமன் என் வீட்டிற்கு வந்துப் போனான்  

ஈ.இராமன் என் வீட்டிற்கு வந்துப் போனான் 

விடை:-ஆ.இராமன் என் வீட்டிற்கு வந்து போனான் 


16)பிழைத் திருத்தம்- சந்திப் பிழை நீக்கல் 

அ. வாய்மொழிப் பாடல்கள் 

ஆ. வாய்மொழி பாடல்கள் 

இ. வாய்ம்மொழி பாடல்கள் 

ஈ. வாய்மொழி பாடற்கள் 

விடை:-  அ. வாய்மொழிப் பாடல்கள் 


17) வழுஉச் சொற்களை நீக்குதல் 

அ. இன்னக்கி  சாயங்காலம் அண்ணாச்சி வரும்  

ஆ.இன்றைக்குச் சாயுங்காலம் அண்ணன் வருவான் 

இ.இன்றைக்கு சாயரச்ச அண்ணன் வருவான்  

ஈ.இன்றைக்கு மாலை அண்ணாச்சி வரும் 

விடை:- ஆ.இன்றைக்குச் சாயுங்காலம் அண்ணன் வருவான் 


18)பிறமொழிச் சொற்களை நீக்குக 

அ. நமஸ்காரம்! சௌக்கியமா?

ஆ.வணக்கம்! நலமா?

இ. வருக;வணக்கம்!

ஈ. வாங்கோ! வணக்கம் 

விடை:-இ. வருக;வணக்கம்!


19)பிறமொழிச் சொற்களை நீக்குக 

அ. சாதம் போட்டு ஜலம் வை 

ஆ.சோறு போட்டு ஜலம் ஊற்று 

இ. சோறு போட்டுத் தண்ணீர் வை 

ஈ. சோறு இட்டுத் தண்ணீர் வை 

விடை:-இ. சோறு போட்டுத் தண்ணீர் வை 


20) பிறமொழி சொற்களற்ற  வாக்கியம்

அ. அமுலில் உள்ள சட்டம் ரத்து செய்யப்படுகிறது 

ஆ.நடைமுறையில் உள்ள சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இ. அமுலில் உள்ள சட்டம் நீக்கம் செய்யப்படுகிறது.

ஈ.நடைமுறையில் உள்ள சட்டம் நீக்கப்படுகிறது.

விடை:- ஈ.நடைமுறையில் உள்ள சட்டம் நீக்கப்படுகிறது.


21)பிறமொழிச் சொற்கள் அற்ற வாக்கியம் 

அ. சிட்டி லைஃப் சுகமானது. 

ஆ. நகர வாழ்க்கை நலமானது.

இ. நகர லைஃப் சுகமானது

ஈ. நகர வாழ்க்கை நலமானது

விடை:-ஆ. நகர வாழ்க்கை நலமானது.


22)என் மூத்த மகன் நேவியில் பணியாற்றுகிறான். இத்தொடரிலுள்ள ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் கூறுக. 

அ.விமானப்படை 

ஆ.தரைப்படை 

இ.எல்லைக்காவல் படை 

ஈ.கடற்படை 

விடை:- ஈ.கடற்படை


23)உனது முயற்சிக்கு எனது கங்கிராசுலேஷன்ஸ் -இத்தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல்   

அ. ஆதரவுகள் 

ஆ.ஒத்துழைப்பு 

இ.பாராட்டுகள் 

ஈ. ஆலோசனைகள் 

விடை:- இ.பாராட்டுகள்


24) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிதல் 

அ. மெட்ராஸ் சிட்டி லைப்தான் சௌகரியமானதுன்னு என் வொய்ப் சொன்னா  

ஆ.சென்னை நகர வாழ்க்கை தான் மிகவும் வசதியாக இருக்கிறதென்று என்            மனைவி சொன்னாள்  

இ. மெட்ராஸ் நகர லைப்தான் மிகவும் வசதியாக உள்ளது என்று என் மனைவி சொன்னாள் 

ஈ. சென்னை நகர வாழ்க்கை தான்  மிகவும் வசதியாக உள்ளது என்று என் மனைவி சொன்னாள் 

விடை:-ஈ. சென்னை நகர வாழ்க்கை தான்  மிகவும் வசதியாக உள்ளது என்று என் மனைவி சொன்னாள் 


25)ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் 

அ. டிக்கட் இல்லாமல் பஸ்சில் பயணம் செய்யக் கூடாது.

ஆ.பயணச் சீட்டு இல்லாமல் பஸ்சில் பயணம் செய்யக் கூடாது.

இ. பயணச் சீட்டு இல்லாமல் பேருந்தில் பயணம் செய்யக் கூடாது.

ஈ.டிக்கட்  இல்லாமல் பேருந்தில் பயணம் செய்யக் கூடாது. 

விடை:-இ. பயணச் சீட்டு இல்லாமல் பேருந்தில் பயணம் செய்யக் கூடாது


26)ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் -பஸ்ஸ்டாண்ட் 

அ. அஞ்சல் நிலையம் 

ஆ. பேருந்து நிலையம் 

இ. காவல் நிலையம் 

ஈ.தொலைக்காட்சி நிலையம் 

விடை:-  ஆ. பேருந்து நிலையம் 


27) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக 

       தால்               தாழ்                         தாள்

அ. முயற்சி       தாழ்ப்பாள்       நாக்கு 

ஆ.தாழ்ந்த       நாக்கு                  முயற்சி 

இ.நாக்கு           தாழ்ப்பாள்        முயற்சி  

ஈ.தளம்              தாழ்ந்த                கல் 

விடை:- இ.நாக்கு           தாழ்ப்பாள்       முயற்சி


28) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக 

       ஒலி                      ஒளி                          ஒழி

அ. ஓசை                 வெளிச்சம்           அழித்தல்

ஆ.வெளிச்சம்     ஓசை                       அழித்தல் 

இ.அழித்தல்         வெளிச்சம்            ஓசை 

ஈ.வெளிச்சம்       அழித்தல்               ஓசை 

விடை:- அ. ஓசை           வெளிச்சம்        அழித்தல்


29) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக 

       வாழை          வாளை             வாலை

அ. மரம்                மீன்                     இளமை

ஆ.விலங்கு        மரம்                      பூ  

இ.செடி                விலங்கு              மரம் 

ஈ.பூ                        செடி                    விலங்கு 

விடை:- அ. மரம்                மீன்                  இளமை


30) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக 

       அலகு            அளகு                அழகு

அ.பறவை            பெண்              வனப்பு 

ஆ.பறவை           பெண்              வனப்பு       

      மூக்கு              பறவை 

இ.பறவை             பெண்              சிறப்பு 

                                பறவை         

ஈ.பறவை            பெண் குயில்    உயர்வு  

விடை:-ஆ.பறவை           பெண்              வனப்பு       

                    மூக்கு              பறவை


31) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக 

       ஆல்             ஆள்                 ஆழ்

அ. மனிதன்       மூழ்கு             ஆலமரம் 

ஆ.மூழ்கு            ஆலமரம்       மனிதன்   

இ.ஆலமரம்        மனிதன்        மூழ்கு  

ஈ.மனிதன்          மூழ்கு             ஆலமரம்  

விடை:- இ.ஆலமரம்        மனிதன்        மூழ்கு  


32)ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிதல் -கோ  

அ.கோயில்  

ஆ.மன்னன் 

இ.கோபம்  

ஈ.கம்பெனி 

விடை:- ஆ.மன்னன் 


33)ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிதல் -கா 

அ. காத்தல் 

ஆ.காகம் 

இ.அரசன் 

ஈ. சோலை

விடை:- ஈ. சோலை


34) ஓரெழுத்து ஒரு மொழி- பொருளுடன் பொருத்துக

1 பூ                                அ) பசு 

2.கோ                           ஆ)சோலை  

3. ஆ                              இ)மலர் 

4.கா                              ஈ)அரசன் 

      1      2     3      4 

a   ஈ    அ    ஆ    இ

b   அ   ஆ    இ    ஈ

c    இ   ஈ     அ   ஆ   

d   ஆ   இ     ஈ    அ


விடை:-c    இ   ஈ     அ   ஆ   


35)ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிதல் -ஐ 

அ. ஐயர்

ஆ.தலைவர் 

இ. தொண்டர் 

ஈ.அடிமை  

விடை:-ஆ.தலைவர் 


36)நடந்தான் என்னும் சொல்லின் வேர்ச்சொல் 

அ. நடந்து 

ஆ. ஆன் 

இ. நட

ஈ.நடந்த 

விடை:-  இ. நட


37)ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ 

அ. ஆக்கல்

ஆ.பசு 

இ.ஆதல் 

ஈ.ஆம் 

விடை:- ஆ.பசு 


38) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - படித்தான் 

அ. படித்தல் 

ஆ.படித்து  

இ.படி 

ஈ.படித்த  

விடை:- இ.படி 


39)வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க-கற்போம் 

அ. கற் 

ஆ.காற் 

இ.கால் 

ஈ.கல் 

விடை:- ஈ.கல்


40) கொண்டு-இச்சொல்லின் வேர்ச்சொல் எது?

    

அ.கொண்டு 

ஆ.கொண் 

இ.கொல்

ஈ.கொள்  

விடை:-ஈ.கொள்


41) செத்தான் - என்ற சொல்லின் வேர்ச்சொல் 

அ. செத்து 

ஆ.செத்த    

இ.சா 

ஈ.சாவு 

விடை:- இ.சா 


42)நீக்கு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் வடிவம் 

அ.நீக்கிய 

ஆ.நீக்கும் 

இ.நீக்குதல் 

ஈ.நீக்க 

விடை:- இ.நீக்குதல் 


43)வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றுதல் -செல் 

அ. செல்வர் 

ஆ.செல்க 

இ.செல்வானை

ஈ. சென்றான் 

விடை:- ஈ. சென்றான் 


44)வேர்ச்சொல்லை  வினைமுற்றாக மாற்றுதல்-உண்

1 உண்ணல்

2.உண்டான் 

3. உண்க

4.உண்ண

    

விடை:-2.உண்டான் 


45)வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குதல் -கேள் 

அ. கேட்ட

ஆ.கேட்டல் 

இ. கேட்டு 

ஈ.கேட்க

விடை:-ஆ.கேட்டல்


46)கல் என்னும் வேர்ச்சொல்லை உடைய தொழிற்பெயர் 

அ. கற்றல் 

ஆ. கற்றான் 

இ. கற்ற 

ஈ.கற்று 

விடை:-  அ. கற்றல் 


47)வேர்ச்சொல்லைக் கொடுத்துத் தொழில் பெயராக்குதல் -பேறு 

அ. பெற்றான் 

ஆ.பெற்றாள் 

இ.பெறுதல் 

ஈ.பெறுகிறது 

விடை:- இ.பெறுதல் 


48) படி என்னும் வேர்ச்சொல்லை உடைய வினையெச்சம் 

அ. படித்த 

ஆ.படித்து  

இ.படித்தவன்  

ஈ.படிக்கிறான்  

விடை:- ஆ.படித்து 


49)பின்வரும் வேர்ச்சொல்லைக் கொண்டு வினையாலணையும் பெயர் ஆக்குக- எழுதுக 

அ. எழுதினான் 

ஆ.எழுதுதல் 

இ.எழுதுபவன் 

ஈ.எழுதும் 

விடை:- இ.எழுதுபவன் 


50) அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக 

    

அ.கீரி,கிளி,கூடம்,குளம் 

ஆ.கூடம், குளம்,கிளி,கீரி 

இ.கிளி,கீரி,குளம்,கூடம் 

ஈ.குளம்,கூடம்,கீரி,கிளி 

விடை:-இ.கிளி,கீரி,குளம்,கூடம்