பிரித்தெழுதுக (Part -4)

கோ

1. கோடிடறி-கோடு+இடறி 

2. கோதிலா- கோது+ இலா 

3. கோதறு -கோது+அறு

4. கோட்டன்ன-கோடு+அன்ன 

5. கோட்டுகிர்-கோடு+உகிர் 

6. கோனோக்கி - கோல்+நோக்கி 

7. கோலமிட்டு - கோலம்+இட்டு 

8. கோவியற்றருமம்- கோ+இயல்+தருமம்  

சா

9. சாந்துணை -சாகும்+துணை 

10. சான்றிதழ் - சான்று+இதழ் 

11. சால்பூன்றிய- சால்பு+ ஊன்றிய  

சி 

12. சிரமுகம்- சிரம்+முகம் 

13. சிற்றோடை - சிறுமை+ஓடை 

14. சிறப்பிடம்-சிறப்பு+இடம் 

15. சிற்றாறு - சிறுமை+ஆறு 

16. சிற்சில -சில+சில 

17. சில்வளை-சில்+வளை

18. சிலம்பொன்று - சிலம்பு+ஒன்று 

19. சிற்றிலக்கியம்-சிறுமை+இலக்கியம் 

20. சிறியன்-சிறுமை+அன்

21. சிறுபொறி-சிறுமை+பொறி 

22. சினத்தீ - சினம்+தீ 

23. சின்னாள்- சில+நாள் 

24. சிலைத்தொழில்-சிலை+தொழில் 

25. சிலப்பதிகாரம்-சிலம்பு+அதிகாரம் 

26. சிதைவிடத்தொல்கார் - சிதைவிடத்து +ஒல்கார்  

சீ

27. சீடர்க்கெல்லாம் - சீடர்க்கு+ எல்லாம் 

28. சீரணி- சீர்+அணி 

29. சீராக -சீர்+ஆக

சு

30. சுயவரம்-சுயம்+வரம்

செ

31. சென்னீர்- செல்+நீர் 

32. செந்தமிழ்-செம்மை+தமிழ் 

33. செவ்வாய் -செம்மை+வாய் 

34. செவ்வேள் - செம்மை+வேள்

35. செம்மலர்-செம்மை+மலர் 

36. செந்தாமரை-செம்மை+தாமரை 

37. செங்கோல்-செம்மை+கோல் 

38. செந்தீ - செம்மை+தீ 

39. செருக்கற்ற - செருக்கு+அற்ற 

40. செந்நெல்- செம்மை+நெல் 

41. செம்பொன் - செம்மை+ பொன்

42. செழும்பொன் - செழுமை+பொன் 

43. செழும்புகழ்- செழுமை+புகழ் 

44. செறிவறிந்து - செறிவு+அறிந்து 

45. செலவழித்தான்- செலவு+அழித்தான்

46. செருக்கெழ- செருக்கு+ எழ

47. செத்தொழியும்- செத்து+ஒழியும்

48. செல்லினங்கள் - செல்+ இனங்கள்

49. செங்கதிரோன் -செம்மை+கதிரோன் 

50. செல்வுழி - செல்+ உழி

51. செல்வமுடைக்கும் - செல்வம்+ உடைக்கும் 

52. செவிச்செல்வம் - செவி +செல்வம் 

53. செவியறுத்து - செவி+அறுத்து 

54. செலவயர்ந்திசின்- செலவு+ அயர்ந்திசின் 

55. செய்தற்கரிய- செய்தற்கு + அரிய

56. செலவொழியா - செலவு+ ஓழியா 

57. செங்கட்கலை   -செம்மை+கண்+கலை

சே 

58. சேவழகு- சே+ அழகு 

59. சேவடி-செம்மை+அடி

60. சேறியாயின்- சேறி+ ஆயின் 

61. சேமமுற - சேமம் + உற

62. சேய்மையுற்ற - சேய்மை+உற்ற   

சொ

63. சொல்லுமாற்றால் - சொல்லும்+ ஆற்றால்

64. சொன்னலாம்- சொல் +நலம் 

65. சொல்லரிய - சொல்+அறிய  

66. சொற்பதம் -சொல்+பதம்

67. தனித்தமிழ்- தனி+தமிழ் 

68. தந்துய்ம்மின்-தந்து+உய்ம்மின்

69. தத்தம் -தம்+தம்

70. தமரல்லார்- தமர் +அல்லார் 

71. தங்குற்றம் - தம் +குற்றம் 

72. தண்ணீர்-தண்மை +நீர் 

73. தகவிலன்- தகவு+ இலன்

74. தண்டுளி - தண்மை+ஒளி 

75. தன்னெஞ்சு- தன்+ நெஞ்சு 

76. தடந்தோள் -தடம்+தோள்

77. தன்னுயிர்-தன்+உயிர் 

78. தற்சூழ - தன்+சூழ 

79. தரமுண்டு-தரம்+உண்டு 

80. தவழ்ந்தோடி - தவழ்ந்து+ஓடி 

81. தவழுமியாக்கை- தவழும்+யாக்கை -

82. தமிழோசை - தமிழ்+ஓசை 

83. தமிப்பசி - தமிழ்+ பசி 

84. தஞ்சென்னி - தம்+சென்னி 

85. தமக்களித்த-தமக்கு+அளித்த

86. தமிழன்னை-தமிழ்+அன்னை 

87. தமிழிலிலா - தமிழில்+ இலா

88. தண்ணொளி- தண்மை+ஒளி 

89. தடிந்தெழிலி - தடிந்து+ எழிலி 

90. தவமிரண்டும் -தவம்+இரண்டும் 

91. தந்நோவார்- தம்+நோவார் 

92. தங்குமிஞ்சி- தங்கும்+இஞ்சி

93. தமிழுக்குதவு - தமிழுக்கு+உதவு 

94. தனக்கென்று - தனக்கு+என்று 

95. தங்குமிஞ்சி -தங்கும்+இஞ்சி

96. தண்டளிர்ப்பதம்- தண்மை+ தளிர்+பதம்    

தா 

97. தாய்மையன்பு- தாய்மை+அன்பு

98. தாப்பிசை-தாம்பு+ இசை 

99. தாளாற்றி-தாள்+ஆற்றி 

100. தாடலை- தாள்+தலை