முக்கிய வினாக்கள்(PART -2)

31) 'பாவேந்தர் ' என அழைக்கப்படுபவர் 

அ)காரியாசான்                            
ஆ) சீத்தலைச் சாத்தனார்
இ)பாரதிதாசன்                             
ஈ)நம்மாழ்வார்

விடை :-  இ)பாரதிதாசன் 

32) 'செக்கிழுத்தச் செம்மல்  ' எனப் பாராட்டப் பெறுபவர்  

அ)அண்ணா                                  
ஆ) பாரதியார்
இ)வ.உ.சிதம்பரனார்                   
ஈ)கண்ணதாசன்

விடை :- இ)வ.உ.சிதம்பரனார்

33) ‘ பாவலர் ஏறு  ' எனப் பாராட்டப் பெறுபவர்  

அ)பெருந்தலைச் சாத்தனார்   
ஆ) தேவ நேயப் பாவணர் 
இ)சோமசுந்தர பாரதியார்        
ஈ)பெருஞ்சித்தரனார்

விடை :-   ஈ)பெருஞ்சித்தரனார்

34) 'கவியோகி   '  என்ற சொல் யாரைக் குறிக்கும் 

அ)பூப்ரமணிய பாரதியார்       
ஆ) பாரதிதாசன்
இ)சுத்தானந்த பாரதியார்        
ஈ)தேசிய விநாயகம் பிள்ளை

விடை :-  இ)சுத்தானந்த பாரதியார்

35) 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா '  என  யார் யாரை பாராட்டினார்

அ)பாரதிதாசனை பாரதி பாராட்டினார்
ஆ) கவிமணியைப் பாரதி பாராட்டினார்
இ) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்
ஈ)கண்ணதாசனைப் பாரதிதாசன் பாராட்டினார்

விடை :-  இ) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்

36) 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு  '  என்று கூறியவர்

அ)டாக்டர் மு.வ                          
ஆ) கலைஞர் கருணாநிதி
இ)பேரறிஞர் அண்ணா            
ஈ)கணிமேதாவியார்

விடை :-  இ)பேரறிஞர் அண்ணா  

37) 'யாதும் ஊரை யாவரும் கேளிர்   '  என்று பாடியவர்

அ)கபிலர்                                    
ஆ) பரணர்
இ)கணியன் பூங்குன்றனார்  
ஈ)ஒளவையார்

விடை :-  இ)கணியன் பூங்குன்றனார்

38) 'தமிழுக்கும் அமுதென்று பேர்    '  என்று பாடியவர்

அ)பாரதியார்                            
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்                      
ஈ)வாணிதாசன்

விடை :-  ஆ)பாரதிதாசன்

39) 'சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே'  இவ்வடியைப்  பாடியவர்

அ)பாரதிதாசனார்                   
ஆ)கவிமணி
இ)கண்ணதாசன்                      
ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

விடை :-      ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

40) 'அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது '  எனக் கூறியவர் 

அ)திருவள்ளுவர்                       
ஆ)கம்பர்
இ)ஒளவையார்                          
ஈ)இளங்கோவடிகள்

விடை :-      இ)ஒளவையார்

41)  'பசித்திரு தனித்திரு விழித்திரு '  எனக் கூறியவர் 

அ)பாரதியார்                            
ஆ)கம்பர்
இ)இராமலிங்கம் பிள்ளை       
ஈ)இராமலிங்க அடிகளார்

விடை :-       ஈ)இராமலிங்க அடிகளார்

42) 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே  '  எனக் கூறியவர் 

அ)பாரதியார்                            
ஆ)பாரதிதாசனார்
இ)கவிமணி                                
ஈ)நாமக்கல் கவிஞர்

விடை :-       ஆ)பாரதிதாசனார்

43) 'கல்வியில்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் ' என்று கூறியவர்

அ)பாரதியார்                            
ஆ)பாரதிதாசனார்
இ)வாணிதாசன்                        
ஈ)முடியரசன்

 விடை :-       ஆ)பாரதிதாசனார்

44) 'சாதி இரண்டொழிய வேறில்லை  ' என்று கூறியவர்

அ)பாரதிதாசனார்                    
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)ஒளவையார்                           
ஈ)பாரதியார்

 விடை :-      இ)ஒளவையார்

45) 'தமக்கென முயலா நோன்றாள் ' இவ்வடிகள் பயின்று வரும் நூல்

அ)கம்பராமாயணம்               
ஆ)சீவக சிந்தாமணி
இ)பெரிய புராணம்                  
ஈ)புறநானூறு

 விடை :-          ஈ)புறநானூறு

46) 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியவர்

அ)பாரதியார்                           
ஆ)கவிமணி
இ)வள்ளுவர்                              
ஈ)திருமூலர்

விடை :-          இ)வள்ளுவர்                             

47) 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறியவர்

அ)சேக்கிழார்                           
ஆ)சுந்தரர்
இ)அப்பர் அடிகள்                     
ஈ)திருமூலர்

விடை :-          ஈ)திருமூலர்

48) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே ' என்று பாடியவர் 

அ)திருவள்ளுவர்                      
ஆ)பரணர்
இ)ஒளவையார்                         
ஈ)செம்புலப் பெயனீரார்

விடை :-          இ)ஒளவையார்

49) 'தீதும் நன்றும் பிறர் தர வாரா  ' இக்கூற்றைச்  சொன்ன புலவர் யார் ?

அ)ஒளவையார்                                    
ஆ)பொன்முடியார்
இ)கணியன் பூங்குன்றனார்             
ஈ)கபிலர்

விடை :-          இ)கணியன் பூங்குன்றனார்

50) நாடகங்கள் குறித்த குறிப்புகள் காணப்படும் நூல்கள்

விடை :-   தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம்

51) தஞ்சை கல்வெட்டு குறிப்பிடும் நாடகம்

விடை:- இராஜா  ராஜவிஜயம்

52) செய்யுள் நாடகங்கள் எவை ?

விடை:- குறவஞ்சி , நொண்டி, பள்ளு 

53) தமிழ் தாய் வாழ்த்து எடுக்கப்பட்ட நாடக நூல்

விடை:- மனோன்மணியம்

54) மனோன்மணியம் லிட்டன் பிரபு எழுதிய ____________ நூலின் தழுவல்

விடை:- இரகசிய வழி

55) தமிழ் தாய் வாழ்த்து  எடுக்கப்பட்ட மனோன்மணியம் நாடகத்தை எழுதியவர்

விடை:- பெ . சுந்தரம் பிள்ளை

56) மனோன்மணியம் நாடகம் ஒரு -----------

விடை:- செய்யுள் நாடகம்               

57)தமிழ் நாடகத்தின் தொடக்கம் ---------------நாடகம்

விடை :- மனோன்மணியம் என்ற செய்யுள் நாடகம்

58)காளிதாஸரின் சாகுந்தலம் என்ற நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்

விடை:- மறைமலையடிகள்

59)தமிழின் முதல் சமூக நாடகம்

விடை:- டாம்பச்சாரி  விலாசம்

60)சுகுண விலாச சபையை தோற்றுவித்தவர்

விடை:- பம்மல் சம்பந்த முதலியார்

61)மனோகரா , சபாபதி நாடகங்களை எழுதியவர்

விடை :- பம்மல் சம்பந்த முதலியார் 

62)நாடகக் கலை என்ற நூலை எழுதியவர்

விடை:- ஒளவை சண்முகம்

63)ஓர் இரவு என்ற நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தவர்

விடை :- பேரறிஞர் அண்ணா   

64)பேரறிஞர் அண்ணாவை தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்று அழைத்தவர்

விடை:- கல்கி

65)பேரறிஞர் அண்ணாவை தமிழ் நாட்டின் 

    பெர்னாட்ஷா என்று அழைக்க காரணமாக இருந்த நூல்

விடை:- ஓர் இரவு

66)சேவா ஸ்டேஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்

விடை:- எஸ்.வி. சகஸ்ரநாமம்

67)கூத்துப் பட்டறை என்ற அமைப்பை தோற்றுவித்தவர்

விடை:- ந.முத்து சுவாமி

68)சிறுகதை காலம்------------- ஆகும்

விடை:- 20  ஆம் நூற்றாண்டு

69)சிறுகதையின் இலக்கணத்திற்குட்பட்ட தமிழின் முதல் சிறுகதை நூல்

விடை:- குளத்தங்கரை அரச மரம் சொன்ன கதை 

70)குளத்தங்கரை அரசமரம்  என்ற நூலை எழுதியவர்

   விடை :- வ.வே.சு ஐயர்