ஐகாரக்குறுக்கம்  

Ø "ஐ"  என்னும்  நெட்டெழுத்து தனித்து ஒலிக்கும் போது மட்டுமே  2 மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும்.

 

Ø "ஐ" பிற  எழுத்துக்களுடன்  சேர்ந்து வரும்போது  தன் மாத்திரை  அளவிலிருந்து குறைந்தே  ஒலிக்கிறது. இதற்கு ஐகாரக் குறுக்கம்  என்று பெயர்.

 

Ø ஐகார குறுக்கம்  சொல்லின் முதல்,இடை,கடை என மூவிடத்திலும்  வரும்.

  • ஐ - மொழிக்கு முதலில் வரும்போது      மாத்திரையாகவும், இடை,கடையில்  வரும்போது  1 மாத்திரையாகவும்  ஒலிக்கும்.

எ.கா.

  • ஐம்பது, ஐயர்,ஐவர் - மொழிக்கு  முதலில்1½  மாத்திரை
  • தலைவன்(லை - ல் + ஐ ) ,வளையல் (ளை- ள்+ஐ )- மொழிக்கு  இடையில் =1 மாத்திரை
  • வலை(லை - ல் + ஐ),கடலை(லை - ல் + ஐ), மேகலை(லை - ல் + ஐ)மொழிக்கு இறுதியில் -- 1  மாத்திரை 

  •