குற்றியலிகரம்
Ø குறுமை+இயல்+இகரம்
Ø குறுகிய ஓசை உடைய இகரம் குற்றியலிகரம்
Ø குற்றியலிகரத்தில் வரும் இகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக
ஒலிக்கும்.
Ø நிலைமொழியின் ஈற்றில் குற்றியலுகரம் வந்து வருமொழியின் முதலில்
யகரம் வந்தால் நிலைமொழி உகரம் இகரமாய் திரியும்.
எ.கா :
1) வீடு (ட்+உ) +யாது = வீடியாது
(நிலைமொழி)+(வருமொழி ) ட் +இ= டி
2)வண்டு+ யாது = வண்டியாது
3)எஃகு + யாது = எஃகியாது
- "மியா " என்னும் அசைச் சொல்லை வருமொழியாக கொண்டவையும் குற்றியலிகரமே
- "மியா" வில் உள்ள இகரம் குறைத்து ஒழித்துக் குற்றியலிகரமாகியது.
எ.கா
கேள் +மியா = கேண்மியா
செல்+மியா = சென்மியா
முற்றியலுகரம்:-
தனக்கு உரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்.
தனிக்குறிலை அடுத்து வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று ) பெற்று வரும்.
எ.கா.
பசு,அது,படு,பெறு,வகு,தபு
மெல்லின
உயரத்தை கொண்டு முடியும் அனைத்தும் முற்றியலுகரமே
(ஙு,ஞு,ணு,நு,மு,னு
)
எ.கா.
காணு,உண்ணு,உருமு,எண்ணு,மின்னு
இடையின
உகரத்தை கொண்டு முடியும் அனைத்தும் முற்றியலுகரமே (யு,ரு,லு ,வு,ழு,ளு)
எ.கா.
தள்ளு,தகவு,முழு,வாலு
கடைசி
எழுத்து:-
வல்லின உகரம்- குற்றியலுகரம் (பெரும்பாலும்)
மெல்லின உகரம்- முற்றியலுகரம்
இடையின உகரம் – முற்றியலுகரம்
0 Comments