குற்றியலுகரம்

Ø குறுமை+ இயல்+உகரம் = குற்றியலுகரம் (இயல்= ஓசை )

 

Ø குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம்

 

Ø எனும் எழுத்து தன்னுடைய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரையாக  ஒலிக்கும்.

 

Ø தனி நெடிலுடனோ , பல எழுத்துக்களுடனோ சொல்லுக்கு இறுதியில் வல்லின உகரத்துடன் சேர்ந்து வரும்.

 

Ø கடைசி எழுத்து கு,சு,டு,து, பு,று என முடியும்.

எ.கா

  எஃகு,வரகு,பத்து, நண்டு, மார்பு

 

Ø ஈற்றுக்கு அயலெழுத்து (இறுதி எழுத்திற்கு முன் உள்ள எழுத்து) வேறுபடுவதன் அடிப்படையில் இது 6  வகைப்படும்.

நெடில் தொடர் குற்றியலுகரம்

2  ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

3  உயிர்த் தொடர் குற்றியலுகரம்

4  வன்றொடர்க் குற்றியலுகரம்

5  மென்றொடர்க் குற்றியலுகரம்

6  இடைத்தொடர்க் குற்றியலுகரம் 

நெடில் தொடர் குற்றியலுகரம்

 

  • ஈரெழுத்து சொல்லாக மட்டுமே இருக்கும்.
  • முதல் எழுத்து நெடிலாகவும் , இரண்டாம் எழுத்து  கு,சு,டு,து,பு,று-வாகவும் மட்டும் இருக்கும். (முதல் எழுத்து குறிலாக இருந்தால் அது முற்றியலுகரம்)

எ.கா.

  நாகு,காசு, ஆடு,மாது, கோபு,ஆறு,காடு,காது,சோறு 

            

ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

 

  • இறுதியில் எழுத்து வல்லின உகரமாக இருக்கும். (கு,சு,டு,து,பு,று)
  • இறுதி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து ஆய்தமாக இருக்கும்.

எ.கா.

  அஃது , இஃது, எஃது,இருபஃது 

உயிர்த் தொடர் குற்றியலுகரம் 

  • இறுதியில் எழுத்து வல்லின உகரமாக இருக்கும். (கு,சு,டு,து,பு,று)
  • இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருக்கும்.
  • உயிர்மெய் எழுத்து குறிலாகவும் (அ) நெடிலாகவும் இருக்கலாம்.
  • 2 எழுத்துக்கு மேற்பட்ட சொல்லாகவே இருக்கும்.

 

எ.கா.:-

  அழகு, அரசு, வரகு, பண்பாடு , பாலாறு, உனது, உருபு, எருது, கயிறு

வன்றொடர்க் குற்றியலுகரம் :-


  • இறுதியில் எழுத்து வல்லின உகரமாக இருக்கும். (கு,சு,டு,து,பு,று)
  • இறுதி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து வல்லின மெய் எழுத்தாக (க்,ச்,ட்,த்,ப்,ற்) இருக்கும்.

எ.கா.

  சுக்கு,பட்டு,உப்பு,காற்று,பாக்கு,எட்டு,பத்து

 

மென்றொடர்க் குற்றியலுகரம் :-

 

  • இறுதியில் எழுத்து வல்லின உகரமாக இருக்கும். (கு,சு,டு,து,பு,று)
  • இறுதி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து மெல்லின மெய் எழுத்தாக (ங்,ஞ்,ண்,ந் ,ம்,ன் ) இருக்கும்.

எ.கா.

  சங்கு,மஞ்சு,நண்டு,பந்து,பாம்பு,அன்பு

இடைத்தொடர்க் குற்றியலுகரம் :-

 

  • இறுதியில் எழுத்து வல்லின உகரமாக இருக்கும். (கு,சு,டு,து,பு,று)
  • இறுதி எழுத்துக்கு முன் உள்ள எழுத்து இடையின மெய் எழுத்தாக (ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ) இருக்கும்.

எ.கா.

  கொய்து, மார்பு,சால்பு,மூழ்கு