ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது மெய்யெழுத்துக்கள் அளபெடுப்பது
- ஒற்றளபெடை சொல்லின் இடையிலும், இறுதியிலும் மட்டுமே வரும்.
- மெய்யெழுத்து 18 ல் (ங்,ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் , ள் ) ஆகிய 10 எழுத்துக்களும், ஆய்த எழுத்து (ஃ) என 11 எழுத்துக்கள் மட்டுமே அளபெடுக்கும் .
- இவை ஒரு குறிலை அடுத்தோ, இருகுறிலை அடுத்தோ அளபெடுக்கும்.
- நெடிலை அடுத்து ஒற்று அளபெடுக்காது,
- ஒற்றளபெடையில் ஒரு ஒற்று இருமுறை எழுதப்படும்.
எ.கா.
வெஃஃகு வார்க்கில்லை,
கண்ண் கருவினை,
கலங்ங்கு நெஞ்சமில்லை,
- செய்யுளில் ஓசை குறையும் போது மற்றுமே ஒற்று அளபெடுக்கும்.
- ஒற்றளபெடையில் வல்லின மெய்யெழுத்துக்கள் (க், ச், ட் , த், ப், ற்), இடையின எழுத்துக்கள் (ர்.ழ்) அளபெடுக்காது,
- மாத்திரை அளவு- 1 மாத்திரை
0 Comments