அளபெடை,  உயிரளபெடை

அளபெடை

    செய்யுளில் ஓசை குறையும் பொது அதன் ஓசையை நிறைவு செய்ய அதன் இன எழுத்துக்கள் சேர்ந்து நீண்டு ஒலிக்கும், அதுவே அளபெடை எனப்படும்.

அளபெடை - அளபு+ எடை

அளபு- மாத்திரை, எடை - எடுத்தல்

எழுத்தினது மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்

இது 2 வகைப்படும்.

1 உயிரளபெடை

2 ஒற்றளபெடை

உயிரளபெடை 

  •  செய்யுளில் ஓசை குறையும் போதும், இனிய ஓசைக்காகவும் அதன் ஓசையை நிறைவு செய்ய ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும் , இறுதியிலும் நிற்கும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும்.இதுவே உயிரளபெடை எனப்படும்
  •  அவ்வாறு அளபெடுக்கும் போது அவற்றிக்கு இனமான குறில் எழுத்துக்கள் அதன் பக்கத்தில் வரும்.
  •  காரத்திற்கு கரமும், ஒளகாரத்திற்கு கரமும் இனமாக வரும்.
          • -,
          • - ,
          • - ,
          • - ,
          • -,
          • ஒள- .
  • மாத்திரை - 3 மாத்திரை
  • உயிரளபெடை 3 வகைப்படும்.

  •    1.     செய்யுளிசை (அல்லது) இசைநிறை அளபெடை

2.     இன்னிசை அளபெடை

3.     சொல்லிசை அளபெடை 

செய்யுளிசை (அ) இசைநிறை அளபெடை 

  • செய்யுளில் ஓசை(அ) இசை குறையும்இடத்து அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுப்பது செய்யுளிசை (அ) இசைநிறை அளபெடை எனப்படும்.
  • இது சொல்லின் முதல், இடை, கடை என மூவிடங்களிலும் வரும்.
  • இது 2 அசை சீர்களை மட்டுமே பெற்றிக்கும்.

எ.கா:-

"கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர்  விழையும் உலகு"

கெடாஅ => கெ+ டா(ட்+ஆ) =>கெடாஅ (இறுதியில் அளபெடுத்துள்ளது )( ஈரசை சீர்= கெ+ டாஅ)

விடாஅர்=> விடா(ட்+ஆ)+ ர் => விடாஅர் ( நடுவில் அளபெடுத்துள்ளது )

ஓஒதல்=> (முதலில் அளபெடுத்துள்ளது)

  • மாத்திரை அளவு = 3 மாத்திரை ( நெடில் 2 + குறில் 1 )

இன்னிசை அளபெடை:-

  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும், இனிய ஓசை தருவதற்காக உயிர்க்குறில் நெடிலாகி பின் அளபெடுப்பது இன்னிசை அளபெடை என்னப்படும்.
  • 3 அசை சீர்களாக வரும்.
  • பெரும்பாலும் உ என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

எ.கா:-

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 

எடுப்பதூஉம் எல்லாம் மழை"

இதில் கெடுப்பதும் (குறில் )--> கெடுப்பதூம் (நெடில் ) =கெடுப்பதூஉம் என்று அளபெடுத்துள்ளது

கெடு+பது+ ஊம் => 3 அசை சீர்

2)"துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும்

    இன்புறூஉ மின்சொல் அவர்க்கு" 

இதில்    துன்புறூஉ,இன்புறூஉ ==> இன்னிசை அளபெடை

 மாத்திரை= 3 மாத்திரை

சொல்லிசை அளபெடை:-

  • செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர்ச்சொல்  வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுப்பது
  • இ எனும் எழுத்தில் முடியும்.
  •  பெயர்ச்சொல் அளபெடையால் திரிந்து பெயர்யெச்சமாகவோ , வினையெச்சமாகவோ வரும்.

எ.கா.

   "குடித்தழீஇக் கோல்ஒச்சம் மாநில மன்னன்

   அடிதழீஇ நிற்கும் உலகு."

இங்கு தழீ- தழுவுதல்( தொழில்பெயர் )--> தழீஇ ( தழுவி) வினையெச்சமாக அளபெடுத்துள்ளது.

 

"உரன்நசைஇ உள்ளம் துணையாக சென்றார்

வரன்நசைஇ யின்னு முளேன். "

இங்கு நசை -(விருப்பம் ) பெயர்ச்சொல்   --> நசைஇ -விரும்பி -வினையெச்சமாக  அளபெடுத்துள்ளது