ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தெரிவு செய்தல்-(பகுதி -2)
| 1 | புலி | விலங்கு |
| புளி | புளிய மரம் சுவை |
|
| 2 | பொலி | விளங்கு(அ) விளக்கு |
| பொளி | கொத்து | |
| பொழி | ஊற்று | |
| 3 | மூலை | முடுக்கு |
| மூளை | அறிவுக்குரிய இடம் உடல் உறுப்பு |
|
| மூழை | அகப்பை | |
| 4 | வலி | வலிமை, வலித்தல் |
| வளி | காற்று | |
| வழி | பாதை | |
| 5 | வலை | மீன் பிடிவலை |
| வளை | பொந்து, வளையல், வளைவு |
|
| வழை | ஒரு வகை மரம், சுரபுனைமரம் |
|
| 6 | வால் | விலங்கின் வால் பகுதி , வெண்மை |
| வாள் | வெட்டும் கருவி , ஒளி பொருந்திய |
|
| வாழ் | உயிர்வாழ், பிழைத்திரு |
|
| 7 | வாலை | இளம் பெண் |
| வாளை | மீன் வகை | |
| வாழை | வாழை மரம் | |
| 8 | விளி | அழைத்தல் |
| விழி | கண் விழித்தல் | |
| 9 | விலா | எலும்பு |
| விளா | விளாமரம் | |
| விழா | திரு விழா | |
| 10 | விலக்குதல் | நீக்குதல் |
| விளக்குதல் | விளக்கமாகக்கூறல் | |
| 11 | வெல்லம் | இனிப்பு |
| வெள்ளம் | நீர்ப்பெருக்கு | |
| 12 | வேலை | தொழில் , பணி |
| வேளை | பொழுது | |
| 13 | வேல் | ஓர் ஆயுதம் |
| வேள் | மன்மதன் , அரசன், கந்தவேல், விருப்பம் |
|
| ண- ன கர வேறுபாடு | ||
| 14 | அனல் | நெருப்பு |
| அணல் | தாடி | |
| 15 | அன்னம் | பறவை |
| அண்ணம் | மேல்வாய் | |
| 16 | அரன் | சிவன் |
| அரண் | சிவன் | 17 | ஆனி | தமிழ் மாதம் |
| ஆணி | இரும்பால் ஆன ஆணி (சுவற்றில் அடிப்பது ) | |
| 18 | ஆன் | பசு |
| ஆண் | ஆண் மகன் | |
| 19 | ஆனை | யானை |
| ஆணை | கட்டளை | |
| 20 | இனை | வரத்து |
| இணை | சேர் | |
| 21 | உன்னு | நினைத்துப்பார் |
| உண்ணு | சாப்பிடு | |
| 22 | ஊன் | இறைச்சி |
| ஊண் | உணவு | |
| 23 | என்ன | கேள்வி |
| எண்ண | நினைக்க , எண்ணிப்பார்க்க |
|
| 24 | என் | என்னுடைய |
| எண் | நினை, எண்ணுதல் |
|
| 25 | கனம் | பாரம், பளு , சுமை |
| கணம் | கூட்டம், நேரம் |
|
| 26 | கனை | குதிரை கனைத்தல் |
| கணை | அம்பு | |
| 27 | கன்னி | இளம் பெண், குமரி |
| கண்ணி | தலைமாலை , அரும்பு, பூமாலை |
|
| 28 | கன்னன் | கர்ணன் |
| கண்ணன் | கிருஷ்ணன் | |
| 29 | கனி | பழம் |
| கணி | சோதிடன், எண்ணுவாயாக |
|
| 30 | கான் | காடு |
| காண் | பார் | |
.jpg)
0 Comments