ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தெரிவு செய்தல்(பகுதி -1)

ல கர- ள கர- ழ கரப் பொருள் வேறுபாடு
1 அலி ஆணும் பொண்ணும் இல்லாமை (அ) பேடி
அளி கொடு,
கருணை
அழி கெடு,
அழித்தல்
2 அலகு பறவையின் மூக்கு,
இயற்பியல் சொல்
அளகு பெண் மயில்
அழகு எழில்
கவின்
வனப்பு
3 அலை நீரலை
கடல் அலை
அலைந்து திரிதல்
அளை வளை,
கவின்
தயிர்,
பிசை
அழை கூப்பிடுதல்
4 ஆலி மழைத் துளி
ஆளி சிங்கம்
ஆழி கடல்,
மோதிரம்
5 ஆல் ஆலமரம்
ஆள் மனிதன்,
ஆட்சி செய்
ஆழ் மூழ்கு
6 இலை தழை,
செடியின் பாகம்
இளை உடல் இளைத்தல் ,
மெலிதல்
இழை நூல் ,
செய்
7 உலவு நடமாடு
உளவு வேவு,
கண்காணித்தல்,
ஒற்று
உழவு பயிர்த்தொழில்(அ) உழவுத் தொழில்
8 உலை கொதிகலன்,
சமைக்க உலை வைத்தல்,
உலைக்களம்
உளை பிடரிமயிர்,
சேறு
உழை உழைத்தல்,
பாடுபடுதல்
9 எல் சூரியன்
எள் தானிய வகை
10 எலும்பு என்பு
எழும்பு எழுந்திரு
11 ஓலி ஓசை,
சத்தம்
ஒளி வெளிச்சம்,
பதுங்கிக் கொள்
ஒழி நீக்கு,
ஒழித்தல்,
தொலைத்து விடு
12 கல் கல்,
படி (கற்றல்),
பாறை
கள் மயக்கம் ,
மது ,
தேன்
13 கலை கவின்கள்,
வித்தை,
கலைந்து போதல்
ஓவியம்
களை நீக்கு,
பயிர்க் களை,
முகத்தின் ஒளி
கழை மூங்கில்
14 கலி சனி,
துன்பம்
களி மகிழ்ச்சி
கழி நீக்குதல்,
மிகுதி,
தடி
15 காலை காலைப்பொழுது
காளை எருது
16 கிலி அச்சம்,
பலம்
,பயம்
கிளி பறவை
கிழி கிழித்தல் (துண்டு துண்டாகக் கிழித்தல்,கோடு கிழித்தல் )
17 குலம் குடிப் பிறப்பு,
சாதி
குளம் நீர்நிலை
18 குலவி குலாவுதல்,
நெருங்கி விளையாடுதல்
குளவி பறக்கும் பூச்சி
குழவி குழந்தை
19 கூலம் தானியம்
கூளம் குப்பை
20 கொல் கொன்றுவிடு
கொள் பெறு,
பெற்றுக் கொள்
தானியம்
21 கோல் கம்பு,
குச்சி,
கொம்பு
கோள் கிரகம்
கோள் சொல்லல்
22 சூல் கர்ப்பம்
சூள் சபதம்
சூழ் திட்டமிடு ,
சுற்றிக் கொள்ளுதல்
23 தலை முதன்மை,
ஓர் உறுப்பு,
தலை(அ) சிரசு
தளை விலங்கு,
கட்டுதல்
தழை தழைத்தல்,
புல்
இலை முதலியன
24 தாலி மங்கல நாண்
தாளி ஒரு வகை பனை,
குழம்பு தாளித்தல்
தாழி குடம்,
வாயகன்ற பாண்டம்
25 தால் நாக்கு
தாள் பாதம்,
காகிதம்
தாழ் பணி,
கீழ்ப்படிதல்
26 தவலை பாத்திரம்
தவளை ஓர் உயிரினம்
27 நால் நான்கு
நாள் கிழமை
28 நீலம் நீல நிறம்
நீளம் நெடுமை
29 பால் உணவு
பாழ் வறிய இடம்,
பாழாக்குதல்
30 புல் விலங்கு உணவு
புள் பறவை