பிறமொழிச் சொற்களை நீக்குதல்- (பகுதி – 1)
அ
1. அதிர்ஷ்டம்- நற்பேறு/நல்ஊழ்/எதிர்பாராத பலன்
2. அங்கத்தினர் - உறுப்பினர்
3. அதிகாரி - அலுவலர்
4. அதிபர்- தலைவர்
5. அபூர்வம் - புதுமை /அரிது
6. அர்த்தம் - பொருள்
7. அலங்காரம் - ஒப்பனை
8. அவசரம் - விரைவு
9. அனுமதி - இசைவு
10. அபிஷேகம் - நீராட்டு/திருமுழுக்கு/நன்னீராட்டு
11. அகங்காரம் - செருக்கு
12. அக்கிரமம் - முறைகேடு
13. அசல் - முதல் / மூலம்
14. அபாயம் - பேரிடர்
15. அனுபவம் - பட்டறிவு
16. அநுக்கிரகம் - அருள்
17. அங்கீகாரம் - ஒப்புதல்
18. அந்நியர் - அயலார்
19. அர்ச்சினை - மலர் வழிபாடு
20. அனுஷ்டானங்கள் - சமய நடைமுறைகள்
21. அபிப்பிராயம்-கருத்து
22. அமுல் படுத்தபடுகிறது - நடைமுறை படுத்தபடுகிறது
23. அந்தஸ்து - தகுதி
24. அச்சன் - தந்தை
25. அபிமானம்- பற்று
26. அபாண்டம்- வீண் பழிக்கூற்று
27. அற்புதம் – அழகு
28. அலமாரி - அடுக்கம், நெடும்பேழை
29. அட்டவணை - குறிப்புப் பட்டியல்
ஆ
30. ஆகாசம் – ஆகாயம்
31. ஆசிர்வாதம் - வாழ்த்து
32. ஆச்சரியம் - வியப்பு
33. ஆலயம்- கோயில்
34. ஆயுசு/ ஆயுள் - வாழ்நாள்
35. ஆனந்தம் - உவகை/மகிழ்ச்சி
36. ஆஸ்தி - சொத்து
37. ஆபத்து - இடர்
38. ஆரம்பம் - தொடக்கம்
39. ஆராதனை - வழிபாடு
40. ஆவேசம் - ஆத்திரம்
41. ஆசிர்வாதம் - வாழ்த்துக்கள்
42. ஆய்வு - பரிசோதனை
43. ஆதவன் – ஞாயிறு
இ:-
44. இலட்சணம் - அழகு
45. இஷ்டம் – விருப்பம்/ஆர்வம்/அவா
46. இருதயம் - நெஞ்சகம்/ நெஞ்சு
47. இலட்சியம் - குறிக்கோள்
48. இரத்து - நீக்கம்
49. இலஞ்சம் - கையூட்டு
50. இம்சை- துன்பம்
51. இலாபம் – வருவாய்
52. இலாகா - துறை
ஈ :
53. ஈசன் - இறைவன்
உ:-
54. உபாத்தியார் - ஆசிரியர்
55. உபதேசம் - அறிவுரை
56. உத்தியோகம் - பணி
57. உத்திரவு - ஆணை
58. உபயோகம் – பயன்
59. உற்சாகம் - ஊக்கம்
60. உபந்யாசம் - பக்திச் சொற்பொழிவு
61. உத்தியோகஸ்தர் - அலுவலர்
62. உபகாரம் - உதவி
63. உயில்- இறுதிமுறி
64. உபசரித்தல்- விருந்தோம்பல்
65. உபயம்- திருப்பணியாளர் கொடை
66. உஷார் - எச்சரிக்கை
67. உச்சரித்தான் - ஒலித்தான்/ கூறினான்
68. உற்பத்தி - ஆக்கம், படைப்பு, விளைச்சல்
எ:-
69. எதார்த்தம் – இயல்பு
ஐ :-
70. ஐதீகம் - உலக வழக்கு
0 Comments