வழுஉச் சொற்களை நீக்குக- 

(பகுதி – 3) 

நா :

1.          நாகரீகம் -நாகரிகம்

2.          நாத்தம் -  நாற்றம்

3.          நவாப்பழம் - நாவற்பழம்

4.          நாநூறு - நானூறு

5.          நாப்பது - நாற்பது

6.          நாட்கள் – நாள்கள்

   நி:

7.          நிகளம் - நீளம்

8.          நிரைய-  நிறைய

 நெ:

9.          நெலமை -  நிலைமை

நே:

10.      நேத்து - நேற்று

 நோ :

11.      நோம்பு – நோன்பு

ப :

12.      பண்டகசாலை - பண்டசாலை

13.      பச்சத்தண்ணீ - குளிர்ந்த நீர்

14.      பல அறிஞர்கள் - அறிஞர் பலர்

15.      பதட்டம் - பதற்றம்

16.      பயிறு - பயிறு

17.      பன்னிரெண்டு - பன்னிரண்டு

18.      பலது - பல

19.      பலுது  - பழுது

20.      பகள் – பகல்

பா:

21.         பாவக்காய் - பாகற்காய்

பீ:

22.         பீக்கங்காய் - பீர்க்கங்காய்

 பு :

23.         புண்ணாக்கு - பிண்ணாக்கு

24.         புட்டு - பிட்டு

25.         புஞ்சை -  புன்செய்

பூ:

26.          பூசணிக்காய் / பூசினிக்காய் - பூசுணைக்காய்

 பெ :

27.         பெட்லம் - பொட்டலம்

பே:

28.         பேரன் -  பெயரன்

 பொ:

29.      பொம்பளை - பெண்பிள்ளை

30.      பொடவை - புடவை

போ :

31.       போறேன் - போகிறேன்

 ம:

32.      மனது / மனசு - மனம்

33.      மனதில் - மனத்தில்

34.      மணத்தக்காளி - மணித்தக்காளி

மா:

35.      மாங்காமரம் - மாமரம்

36.      மானம் பார்த்த - வானம் பார்த்த

 மு :

37.      முந்தாணி -முன்றானை

38.      முழித்தான் - விழித்தான்

39.      முயற்சித்தான் - முயன்றான்

40.      முழுங்கு - விழுங்கு

41.      முன்னூறு - முந்நூறு

42.      முடுக்கு - மிடுக்கு

 மெ:

43.       மெனக்கெட்டு -   வினைகெட்டு

மோ:

44.       மோந்து - முகர்ந்து

 ரொ:

45.       ரொம்ப - நிறைய / நிரம்ப

 வ :

46.      வண்ணத்திப் பூச்சி - வண்ணத்துப்பூச்சி

47.      வயறு / வயிரு   - வயிறு

48.      வலதுப்பக்கம் - வலப்பக்கம்

49.      வத்தல் - வற்றல்

 வா:

50.      வாயப்பழம் - வாழைப்பழம்

வி:

51.      விடியங்காட்டி - விடியற்காலை

52.      விக்குறான் - விற்கிறான்

53.      விளக்கிப் போடுங்க - விளக்கிக் கூறுங்கள்

54.      விசிரி- விசிறி

 வெ:

55.      வென்னீர் - வெந்நீர் 

56.      வெங்கலம்- வெண்கலம்

57.      வெட்டிப்பேச்சு - வெற்றுப்பேச்சு

58.      வெய்யல்  -  வெயில்

59.      வெனை - வினை

60.      வெண்ணை - வெண்ணெய்

 வே:

61.      வேணும்  - வேண்டும்

62.      வேர்வை - வியர்வை

63.      வேண்டாம் - வேண்டா

 தீ:

64.      தீவட்டி - தீவர்த்தி