வழுஉச் சொற்களை நீக்குக-
(பகுதி – 2)
க
:
1. கடப்பாறை- கடப்பாரை
2. கறடு - கரடு
3. கட்டிடம் - கட்டடம்
4. கண்ணாம்பூச்சி - கண்ணாம்பொத்தி
5. கருப்பட்டி - கரும்புக்கட்டி
6. கழட்டி - கழற்றி
7. கண்ணாலம் - கல்யாணம்
8. கவுறு/ கயறு - கயிறு
9. கடக்கால்/ கடகால் - கடைக்கால்
10. கவுனி - கவனி
11. கத்திரிக்கோல் - கத்தரிக்கோல்
12. கத்திரிக்காய் - கத்தரிக்காய்
13. கருவேற்பிலை- கறிவேப்பிலை
கா:
14. காத்து -காற்று
15. காத்தாலே- காலையிலே
16. காவா – கால்வாய்
கி :
17. கீராணம் - கிரகணம்
கீ
:
18. கீணி - கீறி
19. கீத்து - கீற்று
கு
:
20. குடக்கூலி - குடிக்கூலி
21. குளுப்பாட்டி - குளிப்பாட்டி
22. குறவளை - குரல்வளை
23. குரும்பு - குறும்பு
24. குலோ - கிலோ
கெ:
25. கெழவன் – கிழவன்
கொ:
26. கொழந்தை – குழந்தை
கோ:
27. கோர்வை - கோவை
28. கோர்த்து - கோத்து
29. கோடாலி – கோடரி
ச:
30. சமயல் – சமையல்
31. சாம்புராணி/ சாம்பராணி - சாம்பிராணி
32. சாய்ங்காலம் - சாயுங்காலம்
33. சாத்து - சார்த்து
சி:
34. சிலவு - செலவு
35. சிலது -சில
36. சிகப்பு – சிவப்பு
37. சிறுவாடு - சிறுபாடு
38. சீக்காய்/ சீயக்காய் – சீகைக்காய்
சு:
39. சுவற்றில் - சுவரில்
40. சுதந்திரம் –சுதந்தரம்
செ:
41. செய்யப் போறீங்க - செய்யப் போகிறீர்கள்
த:
42.
தலைகாணி
- தலையணை
43.
தவக்களை-
தவளை
44.
தடமாட்டம்
-தடுமாற்றம்
45.
தண்ணி
- தண்ணீர்
46.
தட்ப
வெட்பம் - தட்ப வெப்பம்
47.
தங்கச்சி
– தங்கை
தா:
48.
தாவாரம் - தாழ்வாரம்
49.
தாப்பாள் - தாழ்பாள்
தி
:
50.
திருநீர்
/ திருநூறு - திருநீறு
51.
திரேகம்
- தேகம்
52.
திருவாணி
– திருகாணி
து
:
53.
துவக்கப்பள்ளி
- தொடக்கப்பள்ளி
54.
துடப்பம்-
துடைப்பம்
55.
துளிர்
- தளிர்
தே:
56. தேனீர் - தேநீர்
57. தேங்காமரம் - தென்னைமரம்
தொ
:
58. தொந்திரவு - தொந்தரவு
59. தொடப்பம் - துடைப்பம்
ந:
60. நஞ்சை -நன்செய்
0 Comments