வழுஉச் சொற்களை  நீக்குக  (பகுதி-1)

அ:

1.       அடமழை  - அடைமழை

2.       அகண்ட - அகன்ற

3.       அடமானம் - அடைமானம்

4.       அடிச்சுட்டா - அடித்துவிட்டான்

5.       அதுகள்/ அவைகள் - அவை

6.       அதுவல்ல - அதுவன்று

7.       அத்தினி - அத்தனை

8.       அண்ணாக்கயிறு - அரைஞாண்கயிறு

9.       அவரக்காய் - அவரைக்காய்

10.   அவுத்திக்கீரை - அகத்திக் கீரை

11.   அளகு  - அழகு

12.   அல்ல - அன்று

13.   அழும்புஅழிம்பு

14.   அருவறுப்பு - அருவருப்பு

15.   அஞ்சு - ஐந்து

16.   அனுப்புனர் - அனுப்புநர்

17.   அதுக்கொருஅதெற்கொரு

18.   அருவமனை - அரிவாள்மனை

19.   அருகாமையில் - அருகில்

20.   அமக்களம் - அமர்க்களம்

21.   அங்கிட்டு- அங்கு

ஆ:

    22.   ஆச்சி - ஆட்சி

23.   ஆத்துக்கு - அகத்துக்கு

24.   ஆம்பிள்ளை - ஆண்பிள்ளை

25.   ஆத்திற்கு - ஆற்றிற்கு

26.   ஆர்த்தி - ஆரத்தி

27.   ஆச்சு - ஆயிற்று

28. ஆத்தங்கரைஆற்றங்கரை

இ:

29.   இத்தினி - இத்தனை

30.   இடதுப்பக்கம் - இடப்பக்கம் 

31.   இரும்பல் - இருமல்

32.   இவையன்று - இவையல்ல

33.   இடைபோடு - எடைபோடு

34.   இன்னிக்கு - இன்றைக்கு

35.   இடஞ்சல் - இடைஞ்சல்

36.   இசுஇழு

37.   இடதுகை - இடக்கை

38.   இடதுபுறம் - இடப்புறம்

39.   இத்துப்போதல்இற்றுப்போதல்

40.   இங்கிட்டுஇங்கு

ஈ:

41.   ஈர்கலி - ஈர்கொல்லி 

உ:

42.   உடமை - உடைமை  

43.   உறிச்சி/உருச்சிஉரித்து

44.   உசிரு/ உசிர் - உயிர்

45.   உந்தன் - உன்றன்

46.   உத்திரவு - உத்தரவு

47.   உசுப்புதல் - எழுப்புதல்

48.   உடம்படிக்கைஉடன்படிக்கை

49.   உலந்து - உலர்ந்து

ஊ:

50.   ஊரணி - ஊருணி

எ:

51.   எண்ணை - எண்ணெய்

52.   எகனை/ மொகனை - எதுகை / மோனை

53.   ஏறச்சி - இறைச்சி

54.   எத்தினி - எத்தனை

55.   எடஞ்சல்இடைஞ்சல்

ஓ:

56.   ஒண்டியாய் - ஒன்றியாய்

57.   ஒருவள் - ஒருத்தி

58.   ஒருத்தன் - ஒருவன்

59.   ஓட்டரை -ஒட்டடை

60.   ஒம்பது - ஒன்பது

61.   ஒசத்தி - உயர்த்தி/ உயர்வு

62.   ஒருக்கால் - ஒருகால்

63.   ஒத்தடம்ஒற்றடம்