பிறமொழிச்  சொற்களை நீக்குதல்- (பகுதி – 2) 

க:

1. கல்யாணம் - திருமணம் 
2. கரங்கள் - கைகள்
3. கஷ்டம் - துயரம் / துன்பம் 
4. கர்வம் - செருக்கு 
5. கஜானா - கூருவூலம் 
6. கனிஷ்ட - இளைய
7. கர்ப்பம் -கருவுறுதல் 
8. கச்சேரி - அரங்கம் 
9. கட்கநேத்ரி -  வாள்நெடுங்கண்ணி
10. கர்மம் -  கடமை

கா :

11. காகிதம் - தாள் 
12. காஷி – காட்சி

கி:-

13. கிராம்பு - இலவங்கம் 
14. கிருகம் - இல்லம் 
15. கிரியை - சடங்கு 
16. கிருகப்பிரவேசம்  - புதுமனை புகுவிழா 
17. கிராமம்- சிற்றூர்
18. கிரீடம் -  மணிமுடி 
19. கில்லாடி - கொடியோன்

கு:-

20. கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
21. குமாஸ்தா - எழுத்தர் 
22. குஷி - மகிழ்ச்சி
23. குமாரன் - மகன் 
24. குபேரன் - பெருஞ்செல்வன் 

கோ:

25. கோஷ்டி  - குழு 
26. கோபம் – சினம்
27. கோஷம் - முழக்கம் 

கை:-

28. கைது -  தளை
29. கைதி – சிறையாளி

ச:-

30. சபை - அவை 
31. சபாநாயகர் - பேரவை தலைவர் 
32. சம்பிரதாயம் - மரபு
33. சங்கீதம் - இசை
34. சங்கம் - மன்றம்
35. சரித்திரம் - வரலாறு 
36. சத்தம்/சப்தம் - ஓசை / ஒலி
37. சந்தேகம் - ஐயம் 
38. சந்தோசம்/ சந்தோஷம் - மகிழ்ச்சி 
39. சபதம் - சூளுரை 
40. சர்க்கார் - அரசு
41. சந்தா- கட்டணம்
42. சனங்கள் - மக்கள்
43. சகலமும் - எல்லாம்
44. சங்கமம் - கூடுதல் 
45. சஷ்டியப்பூர்த்தி  - மணி விழா 
46. சதாபிஷேகம் - நூற்றாண்டு விழா 
47. சமேதராய் - இணையாய் 
48. சரித்திரம் - வரலாறு 
49. சம்பாஷணை - உரையாடல் 
50. சன்னல் , ஜன்னல் -  பலகணி 
51. சமஸ்தானம் - அரசு
52. சந்தர்ப்பம் - வாய்ப்பு , சூழ்நிலை 
53. சாதாக்கட்டணம் -  இயல்புக் கட்டணம்
54. சக்தி - ஆற்றல் , திறன் 
55. சம்பந்தம் - தொடர்பு 
56. சர்வம் - எல்லாம், அனைத்தும் 

சா:-

57. சாதாரணம் – எளிமை
58. சாவி - திறவுகோல் 
59. சாதுரியம் - அறிவுத் திறன் 
60. சாமான்கள் - பொருட்கள் 
61. சாதம் -  சோறு

சி:-

62. சிதம்பரம் -  திருச்சிற்றம்பலம்  
63. சிநேகம் - நட்பு 
64. சிகிச்சை - மருத்துவம் 
65. சித்திரம் - ஓவியம்
66. சின்னம் - அடையாளம் 
67. சிபாரிசு - பரிந்துரை 
68. சிருஷ்டித்தல் - படைத்தல் 
69. சிரஞ்சீவி - திருநிறை செல்வன்  

சீ:-

70. சீமந்தம் – வளைகாப்பு