பிறமொழிச் சொற்களை நீக்குதல்- (பகுதி – 3)
சு:
1. சுகம் - நலம்
2. சுயாட்சி - தன்னாட்சி
3. சுபதினம் - நன்னாள்
4. சுகபோகம் - நல்லின்பம்
5. சுத்தம் – தூய்மை
6. சுயநலம் - தன்னலம்
சே:
7. சேவை – தொண்டு
ஞா:
8. ஞாபகார்த்தம் – நினைவு
ட:
9. டபேதார் – வாயிலோன்
த:-
10. தர்ணா – ஆர்ப்பாட்டம்
11. தர்மம் - அறம்
12. தகவல் - செய்தி
13. தத்துவம் - உண்மை
14. தம்பதிகள் - மணமக்கள்
தா:-
15. தாலுக்கா அலுவலகம் - வட்டாச்சியர் அலுவலகம்
தி:-
16. தினசரி - நாள்தோறும்
17. தினம் – நாள்
18. திருப்தி - நிறைவு
தீ:-
19. தீபம் - விளக்கு
தே:-
20. தேசம் – நாடு
21. தேஜஸ் - தெளிவு , பொலிவு
து:-
22. துரதிர்ஷ்டம் - கேட்டூழ்
தை:-
23. தைரியம் – துணிவு
ந :-
24. நஷ்டம் - இழப்பு
25. நமஸ்காரம் – வணக்கம்
நா:-
26. நாயகன் - தலைவன்
27. நாயகி - தலைவி
28. நாஷ்டா – சிற்றுண்டி
நி:-
29. நிரந்தரமாக - நிலையாக
30. நிபுணர் - வல்லுநர்
31. நியதி - வரையறை
32. நித்திரை – உறக்கம்
ப:-
33. பத்திரிகை – இதழ்/செய்தித்தாள்
34. பஜார் - கடைத்தெரு
35. பதார்த்தம் - பண்டம்
36. பதில் - விடை
37. பயம் - அச்சம்
38. பரீட்சை - தேர்வு
39. பந்துமித்திரர் - சுற்றமும் நட்பும்
40. பட்சி - பறவை
41. பகிஷ்கரித்தனர் - விலக்கினார்
42. பண்டிகை – திருவிழா
43. பலே - நன்று
44. பக்தி - பற்று
45. பணிநிரந்தரம் - பணிநிலைப்பு
46. பஞ்சாயத்து - ஐம்பேராயம்
பா:-
47. பாக்கி - நிலுவை
48. பாரியாள் – மனைவி
49. பால்கனி - முகப்பு மாடம்
பி:-
50. பிரச்சனை - சிக்கல்
51. பிரபந்தம் - சிற்றிலக்கியங்கள்
52. பிரசங்கம் - சொற்பொழிவு
53. பிரதிநிதி - உறுப்பினர்
54. பிரதானம் - முதன்மை
பு:-
55. புத்தி - அறிவு
56. புத்திரன் - மகன்
57. புத்தகம், புஸ்தகம் - நூல்
58. புரோநோட் - ஒப்புச்சீட்டு
59. புஷ்பம் – மலர்/பூ
பூ:-
60. பூஜை - வழிபாடு
61. பூகோளம் - புவியியல்
பெ:-
62. பெற்றம் -ஆ , பசு
63. பௌர்ணமி - முழு நிலவு
64. பௌதிகம் – இயற்பியல்
பே:-
65. பேட்டி - நேர்காணல்
66. பேப்பர் – தாள்
67. பேட்டை - புறநகர்
பை:-
68. பைசல் – தீர்வு
69. பைசா - காசு
பொ:-
70. பொக்கிஷம் - பொருள், செல்வம்
0 Comments