பிறமொழிச் சொற்களை நீக்குதல்-(பகுதி – 4)

போ:-

1. போதனை -  கற்பித்தல்

ம:-

2. மக்கர் -  இடைஞ்சல் 
3. மர்மம் - புதிர்
4. மதுரவசினி -  தேன்மொழிப்பாவை 
5. மத்தியானம் - நண்பகல் 
6. மந்திரி - அமைச்சர் 
7. மனு – விண்ணப்பம்
8. மத்தியம் - நடுமை 
9. மரியாதை - மதிப்பு 

மா:-

10. மாமூல் – பழையபடி/வழக்கம் 
11. மாலுமி - நாவாயோட்டி  
12. மார்க்கம் - வழி

மி:-

13. மிட்டாய் - தீங்கட்டி 
14. மீனாட்சி - அங்கயற்கண்ணி

மு:-

15. முகாம் -  பாசறை 
16. முக்கியம் - முதன்மை
17. முக்கியஸ்தர் - முதன்மையானவர் 

மே:-

18. மேஸ்திரி - தலைமைத்தொழிலாளன் 

மை:-

19. மைதானம் - திறந்தவெளித்திடல் / திடல்

ய:-

20. யதார்த்தம் - இயல்பு 

யோ:-

21. யோகம் - வாய்ப்பு 
22. யோக்கியதாபத்திரம் - நற்சான்றிதழ்S

ர:-

23. ரசீது - பற்றுச்சீட்டு 
24. ரசம் - சாறு 
25. ரத்தம் - குருதி 
26. ரம்மியம் -  வனப்பு 
27. ரத்து – நீக்கம்
28. ஸ்ரீரங்கம் – திருவரங்கம்

 ரா:-

29. ராஜினாமா -  விலகல்  

ரு:-

30. ருசி – சுவை

ரௌ:- 

31. ரௌடி - போக்கிரி 
32. ரௌத்திரதுர்க்கை - எரிசினக்  கொற்றவை 

லா:-

33. லாபம் – ஆதாயம்

லை:-

34. லைசன்ஸ் -  உரிமம்

வ:-

35. வருஷம், வருசம் – ஆண்டு
36. வக்கீல் -  வழக்குரைஞர் 

வா:-

37. வார்த்தை - சொல் 
38. வாலிபர் – இளைஞர்

வி:-

39. விருதகீரிச்சுரர்  -  பழமைநாதர் 
40. விஞ்ஞானம் - அறிவியல் 
41. விஷயம்/விசயம் – செய்தி/ பொருள்
42. விக்கிரகங்கள் -சிலைகள் 
43. விசாலாட்சி - நீள்நெடுங்கண்ணி 
44. விருத்தாச்சலம் -  திருமுதுகுன்றம் , பழமலை 
45. விரதம் -  நோன்பு/பட்டினி 
46. வித்தியாசம் - வேறுபாடு 
47. விபூதி - திருநீறு 
48. விவாதம் - உரையாடல் 
49. விவாகம் - திருமணம் 
50. விஷம் - விடம் 
51. விவசாயம் - வேளாண்மை 
52. வினாடி / விநாடி- நொடி 
53. வியாபாரம் – வணிகம்

வீ:-

54. வீரம் - மறம்

வெ:-

55. வெள்ளம் - நீர்பெருக்கு

வே:-

56. வேதாரணியம் - திருமறைக்காடு 
57. வேதம் - மறை 
58. வேடிக்கை – காட்சி

வை:-

59. வைத்தியர் - மருத்துவர்

ஷா:-

60. ஷமிக்கணும் - மன்னிக்க வேண்டும்
61. ஷாப் – கடை

ஜ:-

62. ஜமக்காளம்/ஜமுக்காளம்  - விரிப்பு 
63. ஜனங்கள் - மக்கள் 
64. ஜன்னல் -  சாரளம்
65. ஜலம் – நீர்
66. ஜமீன்- நிலபுலம்

ஜா:-

67. ஜாக்கிரதை -  எச்சரிக்கை/ விழிப்பாக
68. ஜாஸ்தி - மிகுதி
69. ஜாமீன் - பிணை 
70. ஜாதி – இனம்
71. ஜேஷ்ட – மூத்த
72. ஸ்திரீ – பெண்