அடைமொழியால்  குறிக்கப்படும் சான்றோர்கள்-       பகுதி -1



ஆசிரியர் அடைமொழி பெயர்கள்
அகத்தியர் தமிழ் முனிவன்
மாதவ முனிவன்
மாமுனி
குறுமுனி
திருமுனி
முதல் சித்தர்
பொதியில் முனிவன்
அமரமுனிவன்
பொதியவரை முனிவன்
குடமுனி
திருவள்ளுவர் நாயனார்
தேவர்
முதற்பாவலர்
தெய்வப்புலவர்
நான்முகன்
மதானுபங்கி
செந்நாப்புலவர்
பொய்யில் புலவன்
தெய்வமொழிப் பாவலர்
தமிழ்மாமுனி
வள்ளுவன்
வான் புகழ் கொண்ட பெருத்தகையார்
தொல்காப்பியர் காப்பியன்
காப்பியனார்
ஐந்திரம் நிறைந்தவன்
திருமூலர் முதல் யோகி
தத்துவக் கவிஞர்
மூலன்
கபிலர் புலன் அழுக்கற்ற அந்தணன்
பொய்யா நாவிற் கபிலன்
குறிஞ்சிக்கவி
நல்லிசை வாய்மொழிக்கபிலர்
விரித்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
குறிஞ்சிக் கபிலர்
குறிஞ்சி கோமான்
பரணர் வரலாற்றுப் புலவர்
நக்கீரன் கீரன்
பொய்யற்ற கீரன்
ஔவையார் தமிழ் மூதாட்டி
தமிழ்ப்பாட்டி
அருந்தமிழ்ச் செல்வி
அவ்வை
இளங்கோவடிகள் அடிகள்
அரசத்துறவி
தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு
தனித்தமிழ் ஊற்று
செந்தமிழ் ஞாயிறு
தமிழ் பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்களை கொண்டவர்
சீத்தலைச்சாத்தனார் தண்டமிழாசான்
சாத்தனார்
கூல வாணிகன்
தண்டமிழ் புலவன்
காரைக்கால் அம்மையார் புனிதவதியார்
அம்மை
பேயார்
திருஞான சம்பந்தர் ஞானசம்பந்தர்
ஆளுடையப்பிள்ளை
இன்தமிழ் ஏசுநாதர்
திராவிட சிசு
ஞானத்தின் திருவுரு
காழி வள்ளல்
திருநாவுக்கரசர் அருள்நீக்கியார்
அப்பரடிகள்
அப்பர்
வாகீசர்
தருமசேனர்
மருள் நீக்கியார்
நாவுக்கரசர்
சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) ஆரூரர்
திருநாவலூரார்
வன்தொண்டர்
சுந்தரர்
தம்பிரான் தோழர்
நாவலூரார்
மாணிக்கவாசகர் வாதபூரடிகள்
தென்னவன் பிரம்மராயன்
திருவாதவூரார்
மணிவாசகர்
சேக்கிழார் அருண்மொழித்தேவர்
உத்தம சோழப் பல்லவன்
தொண்டர்சீர் பரவுவார்
தெய்வப்புலவர்
நம்மாழ்வார் வேதம்தமிழ் செய்த மாறன்
மாறன்
பராங்குசர்
இளம்பூரணர் உரையாசிரியர்
அப்பர்,சம்பந்தர், சுந்தரர் மூவர் முதலிகள்
திருமழிசை ஆழ்வார் பக்திசாரர்