ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தெரிவு செய்தல்-(பகுதி -4)
| 1 | இரை | தீனி |
| இறை | இறைவன், அரசன், கடவுள் |
|
| 2 | இரும்பு | உலோகம் |
| இறும்பு | புதர் | |
| 3 | இரத்தல் | யாசித்தல் |
| இறத்தல் | சாதல் | |
| 4 | உரவு | வலிமை |
| உறவு | சுற்றம் உறவினர் தொடர்பு |
|
| 5 | உரை | சொல் , பேச்சு |
| உறை | தலையணை உறை, மூடி |
|
| 6 | உரல் | இடிக்கும் உரல் |
| உறல் | பொருந்துதல் | |
| 7 | உரு | வடிவம் |
| உறு | மிகுதி | |
| 8 | எரி | தீ |
| எறி | வீசு | |
| 9 | ஏரி | நீர் நிலை |
| ஏறி | மேலை ஏறி | |
| 10 | ஒரு | ஒன்று |
| ஒறு | தண்டித்தல் (அ) தண்டனை | |
| 11 | கரை | ஓரம் கூவு |
| கறை | அழுக்கு, களங்கம் |
|
| 12 | கரி | யானை அடுப்புக்கரி |
| கறி | காய்கறி மிளகு |
|
| 13 | குரங்கு | வானரம் |
| குறங்கு | தொடை | |
| 14 | குரவர் | சமய பெரியோர் |
| குறவர் | குறவர் இன மக்கள் | |
| 15 | குரைத்தல் | நாய் குரைத்தல் |
| குறைத்தல் | சுருக்குதல் | |
| 16 | கூரை | வீட்டுக் கூரை |
| கூறை | துணி | |
| 17 | கூரிய | கூர்மையான |
| கூறிய | சொன்ன | |
| 18 | கோருதல் | விரும்புதல் |
| கோறல் | கொல்லுதல் | |
| 19 | சிரை | மயிர் நீக்கு |
| சிறை | சிறைச்சாலை | |
| 20 | சீரிய | சிறந்த |
| சீறிய | சினந்த | |
| 21 | செரித்தல் | சீரணமாதல் |
| செறித்தல் | திணித்தல் | |
| 22 | சொரி | பொழி(ஊற்று) |
| சொறி | தினவு (நோய்) | |
| 23 | தரி | அணி அணிந்து கொள் |
| தறி | வெட்டு | |
| 24 | திரை | திரைச் சீலை அலை |
| திறை | வரி கப்பம் |
|
| 25 | துரவு | கிணறு |
| துறவு | துறந்துவிடுதல் | |
| 26 | துரை | பிரபு |
| துறை | நீர் நிலையில் இறங்கும் இடம் | |
| 27 | நரை | வெள்ளைமயிர் |
| நறை | வாசனை | |
| 28 | நிரை | வரிசை பசு மந்தை |
| நிறை | எடை நிறைத்து வைத்தல் |
|
| 29 | பரி | குதிரை |
| பறி | பறித்தல் | |
| 30 | பரவை | கடல் |
| பறவை | பறப்பனவாகிய உயிரினம் | |
| 31 | பரந்த | பரவிய |
| பறந்த | பறந்துவிட்ட | |
| 32 | பாரை | கடப்பாரை |
| பாறை | கல்பாறை | |
| 33 | பெரு | பெரிய |
| பெறு | அடை | |
| 34 | பொரு | போர் செய்தல் |
| பொறு | பொறுத்துக் கொள் | |
| 35 | பொரி | நெல் பொரி |
| பொறி | இயந்திரம் | |
| 36 | மரி | இற |
| மறி | மான்குட்டி | 37 | மரு | மனம் |
| மறு | திடு, குற்றம், மறுத்தல் துட குற்றமான |
|
| 38 | மரை | மான், தாமரை |
| மறை | வேதம் | |
| 39 | மரம் | செடிகளின் வகை தரு |
| மறம் | வீரம் | |
| 40 | வருத்தல் | துன்புறுத்தல் |
| வறுத்தல் | காய்கறிகளை வறுத்தல் | |
| 41 | விரல் | கைவிரல் |
| விறல் | வெற்றி |
.jpg)
0 Comments