புகழ் பெற்ற ஆசிரியர்களின் மேற்கோள்கள்-(பகுதி–4)
தேவாரம் |
நாமார்க்கும் குடியல்லோம் |
மனோன்மணியம் |
நீராரும் கடலுடுத்த (பேராசிரியர் சுந்தரம் பிள்ளை) |
போர்க் குறி காயம் புகழின் காயம் |
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் |
நாலடியார் |
கல்வி கரையில ; கற்பவர் நாள்சில |
கல்வி அழகே அழகு |
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே , நீர் ஒழியப்பால் உன் குருகின் தெரிந்து |
பெரியார் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் |
நான்மணிக்கடிகை |
யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி |
தனக்கு பாழ் கற்றறிவில்லா உடம்பு |
யார் மட்டும் கொள்ளாமை வேண்டும் பகை |
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை |
அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் |
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமில்லா போழ்தத்து வள்ளன்மை குற்றம்</ td>
|
ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் |
கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர் இல் |
நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை, பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம், தனக்கணி
தான்செல் உலகத்து அறம் |
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் |
பழமொழி நானூறு |
கற்றலின் கேட்டலே நன்று |
குன்றின் மேல் இட்ட விளக்கு |
தனிமரம் காடாதல் இல் |
திங்களை நாய்க் குறைத்தற்று |
நிறைகுடம் நீர்த்ததும்பல் இல் |
நுணலும் தன்வாயால் கெடும்</ td>
|
பாம்பின் கால் பாம்பறியும் |
முறைக்கு மூப்பு இளமை இல் (கரிகாலன் ) |
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (மனுநீதிச் சோழன்) |
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா(பாரதம்) |
பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையோன் |
முதலில்லார்க்கு ஊதியமில் |
புல்மேயா தாகும் புலி |
தமக்கு மருத்துவர் தாம் |
அணியெல்லாம் ஆடையின் பின் |
திரிகடுகம் |
நெஞ்சம் அடங்குதல் வீடாகும் |
வேளாளன் என்பான் விருத்திருக்க உண்ணாதான் |
தாளாளன் என்பான் கடன்பட வாழாதான் |
நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும் |
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி |
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்</ td>
|
திறன்வேறு கூறிற் பொறையும்- அறவினையைக் |
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் |
ஊராண்மை என்னும் செருக்கு |
இன்னா நாற்பது |
தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா |
குழவிகள் உற்றபிணி இன்னா |
இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு |
இன்னா - ஈன்றாளை ஓம்பாவிடல் |
திருவுடையாரைச் செறல் இன்னா</ td>
|
இனியவை நாற்பது |
பிச்சைப்புக் காயினும் கற்றல் மிகவினிதே |
மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே
வருவாய் அறிந்து வழங்க வினிதே
ஏருடையாள் வேளாண்மை தானினி(து)
சிறுபஞ்சமூலம்
நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு
பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
படைதனக்கு யானை வனப்பாகும்
சொல்லின் வனப்பே வனப்பு
ஏலாதி
தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினார்,
எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு
கம்பராமாயணம்
கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்
வன்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையரும் இல்லை மாதோ
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற்றன்றே
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்</ td>
அன்புள இனி நாம் ஐவர்கள் உலரானோம்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ
அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
விருந்தவரின் என்னுறுமோ என்று விம்மும்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
வீரமும் களத்தே போட்டு வெறும்
கையோடு இலங்கை புக்கான்
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
வஞ்சியென நெஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
இன்று போய் நாளை வா
நற்றிணை
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரீகர்
குறுந்தொகை
வினையே ஆடவற்கு உயிரே வாள்நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரே (பாலை பாடிய பெருங்கடுகோ )
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு இவள்
உயர்தவச் சிறது காமமோ பெரிதே (கபிலர்)
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலம் யானே -(நக்கீரர் )
விருந்து வரக் கரைந்து காக்கை
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணின் காக்கும் (வெள்ளிவீதியார்)
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியர்என் கணவனை (அம்மூவனார் )</ td>
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ (இறையனார் )
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (செம்புலப் பெயல் நீரார்
ஐங்குறுநூறு
அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழிநீரெ (கபிலர்)
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர் என வேட்டோய் யாயே (ஓரம் போகியார் )
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லானே ஆய மகள் (சோழன் நல்லுருத்திரன் )
பரிபாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூ வோடு புரையும் சீரும் ; பூவின்
இதழுகத்து அனைய தெருவம்; இதழுகத்து
அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல்கோயில்
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்
சிறுபாணாற்றுப்படை
தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை
பட்டினப்பாலை
முட்டாச்சிறப்பின் பட்டினம் பெறினும்
கொள்ளவதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது பல் பண்டம் பகர்ந்து வீசும்
0 Comments